இந்து ஞான மரபின் நான்கு யோக நிலைகள்
இந்து ஞான மரபில் ஒருவர் தனது மனதை தெய்வத்தின்பால் நிலைநிறுத்தி இறைவனிடம் ஐக்கியமாவது அல்லது ஜீவாத்மா தன்னை பரமாத்மாவுடன் இணைத்து கொள்ளவது யோகம் எனப்படுகிறது. இதை இந்து மரபில் பக்தி, கர்ம, யோக மற்றும் ஞான என நான்கு வழிகளில் இறைவனையோ அல்லது பரமாத்மாவையோ அடையாளம் என்கிறது. இந்து ஞான மரபு இப்படித்தான் பரமாத்மாவை(இறைவனை) அடைய முடியும் என்று எங்கும் வரையறுக்கவில்லை. ஒருவருக்கு பக்தி, சடங்கு அல்லது சம்பிரதாயங்களில் உடன்பாடு இல்லை என்றால் யோகம்(இராஜ) அல்லது ஞான வழியை தேர்ந்தெடுக்கலாம் என்கிறது பரமாத்மாவை அடைய. பக்தி யோகம் பக்தி யோகம் என்பது பக்தி மற்றும் அன்பின் மூலம் இறைவனிடம் ஒன்றிணைவதாகும். அதாவுது ஜீவாத்மா தன்னை பக்தியின் மூலம் பரமாத்மாவோடு இணைத்து கொள்வதாகும். ராமானுஜர் பிரம்மத்தை(பரமாத்மாவை) அடைவதற்கு பக்தி மார்க்கத்தையே முதன்மையாக முன்வைத்தார். கர்ம யோகம் கர்ம யோகம் என்பது செயல்களை முதன்மையாக கொண்டது. அதேபோல் கர்ம யோகம் வேதத்தை அடிப்படையாக கொண்டு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை முதன்மையாக முன்னிறுத்துபவை. உதாரணத்துக்கு பூர்வமீமாம்சம் என்னும் தரிசனம் வேதத்தை மூல நூல...