Paganism | பாகனியம்
கிறிஸ்துவம் அல்லது ஆபிரகாமிய(கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம்) மதங்கள் தவிர அல்லது அவை தோன்றுவதற்கு முன்பாக உலகம் முழுவதுவும் பொதுவாக காணப்பட்ட பலதெய்வ வழிபாட்டு முறையே paganism அல்லது பாகனிய மதம் எனப்படுகிறது. மனிதர்கள் ஆதி காலத்தில் நெருப்பு, நீர், காற்று, இடி, ஆகாயம் என்று இயற்கையை வழிபட்டனர். உதாரணமாக, ஜீயஸ் பண்டைய கிரேக்கத்தில் வானத்தின் (இடி) கடவுள், இந்திரன் - இந்தியர்களில், தரனாக்கள் - செல்ட்களில், ஸ்காண்டிநேவிய மக்களிடையே - தோர், பால்டிக் மத்தியில் - பெர்குனாக்கள், ஸ்லாவ்களிடையே - பெருன். பண்டைய கிரேக்கர்களில் சூரியனின் கடவுள், எகிப்தியர்களில் ரா, மற்றும் ஸ்லாவ்களில் டாஸ்பாக். நீரில் நெப்டியூன் கடவுள் நெப்டியூன், இந்தியாவில் - சூரிய பகவான். உலகம் முழவதும் பூர்வகுடிகள் வழிபாடு இயற்கையை கொண்ட பல தெய்வ வழிபாடாக இருந்துருகிறது. என்ன அதன் பெயர்கள் தான் வேறு. பிற்காலத்தில் இயற்கைக்கு மனித வடிவம் கொடுத்து உருவ வழிபாடாக வழிபட்டான். அதேபோன்று நம் ஊர்களில் போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். இதுபோன்று உலகம் முழுவதும் உயிரிழந்த வீரர்களுக்கு hero stone அல்லது ஏ...