Posts

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

Image
தத்துவம் என்பது அறிவியல், ஆன்மிகம், அரசியல் என பல தளங்களில் விரிவடைந்து விவாதத்திற்கு உட்படக்கூடியது. அதுபோல, அத்வைத தத்துவமும் ஆன்மிகம், அரசியல், அறிவியல் மற்றும் பல மேற்கத்திய தத்துவங்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்வைத தத்துவம் வாழ்க்கையில் மோட்சத்திற்கான (liberation) வழியாக சுயத்தை உணர்தல் என்ற ஞான தேடலை முன்வைக்கிறது. இந்நிலையில், இந்த ஞான தேடலின் சரியான அறிவை பெறுவதற்காக ஆறு பிரமாணங்களை அத்வைத வேதாந்தம் முன்வைக்கிறது. இந்த ஆறு பிரமாணங்கள் யதார்த்தத்தின் தன்மை, சுயம் மற்றும் non-duality ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையாக செயல்படுகின்றன. அவை: 1. பிரத்யக்ஷம் (Perception): நேரடி உணர்வுகள் மூலம் பெறப்படும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணம்: மரத்தை காணுதல், ஒலியை கேட்குதல் போன்ற அனுபவங்கள். இவை நமது புலனுணர்வுகளால் நேரடியாக அறியப்படும் அறிவாகும். 2. அனுமானம் (Inference): நடந்த நிகழ்வுகள் அல்லது அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தை தர்க்கரீதியாக ஊகித்து புரிந்து கொள்வது. உதாரணம்: மலை மீது புகை காணப்படும்போது, அங்கு தீ இருக்கிறது என தெரிந்து கொள்வது. ...

ஆதிசங்கரரின் அத்வைதம்

Image
 கடவுளும் அணைத்து உயிரினங்களும் சமம் என்ற வகையில் கடவுளிடம் சாமானியனை நெருக்கமாக கொண்டு சேர்த்த தத்துவம்தான் ஆதிசங்கரரின் அத்வைதம்.  சங்கரரின் காலத்தில் இந்து மரபு சமண பௌத்த தத்துவங்களின் தாக்கத்தாலும் கர்ம மார்க்கத்தின் சடங்குகளாலும் திசைமாறி  சிதறுண்டது. இவ்வாறு சிதறுண்ட கிடந்த இந்து மரபை ஒருங்கிணைத்து காலத்திற்கு ஏற்ப தனது ஞான மார்க்கத்தின் மூலம் கட்டி எழுப்பியவர் சங்கரர். பௌத்ததின் உயரிய கருத்துக்களையும் வேதத்தின் ஞான காண்டத்தையும் உள்வாங்கிக்கொண்டு உருவான தத்துவமே அத்வைதமாகும். சங்கரரின் அத்வைத தத்துவம் என்பது, பிரமம்மும் ஆத்மாவும் ஒன்றே இரண்டல்ல என்பதாகும்(Non duality state). ஜீவாத்மா இந்த மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் நிலையானது என்று தான் என்ற அகந்தையில் பிரம்மத்தால் உருவான மாயையில் சிக்கிக்கொண்டு உழல்கின்றது. எப்பொது ஜீவாத்மா தன்னை தானே உணர்ந்து(self realize) தான் பிரம்மத்தின் ஒரு அங்கம் என உணர்கிறதோ அப்போதே இந்த பிரபஞ்ச மாயையில் இருந்து விடுபட்டு முக்தி(liberal) அடைகிறது. இதை இன்றைய காலகட்டத்திருக்கு ஏற்ப புரிந்துகொள்ளவேண்டும் என்றால் பிரம்ம...

இந்து ஞான மரபு

Image
இந்து ஞான மரபு என்பது வெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் இறை வழிபாட்டை மட்டும் கொண்டதல்ல மாறாக அவை பல தத்துவங்களையும் தரிசனங்களை சிந்தனைகளையும் நீதி நூல்களையும் தன்னகத்தே விவாதித்து உருவானவை. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்கள் அனைத்தையும் பகுத்துபார்ப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறை உள்ளது. அந்த முறையில் இந்து ஞான மரபை அணுகினால் எளிதாக புரிந்து கொள்ளலாம்  அதன் அடிப்படைகளை. எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும் அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்தபடிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே, நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள் இதே முறையிலே தான் பழமைவாய்ந்த  இந்திய, கிரேக்...

வைதீகம்

Image
இந்தியா ஞான மரபினை வைதீகம், அவைதீகம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். வேதங்களை மூல நூலக ஏற்கும் பிரிவு வைதீகம் என்றும். வேதங்களை முற்றிலும் மறுக்கும் தரப்பு அவைதீகம் என்றும் பிரிக்கப்படுகிறது. இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால் வைதீக மரபின் அடிப்படையான வேதம் உருவான தொடகத்தை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு சமூகரீதியாக முன்னேறும் இனக்குழுக்களின் தொடக்கப்புள்ளி நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கா முடியும். இந்த நாட்டார் பண்பாடு என்பது பல சடங்குகள், நம்பிக்கைகள், எளிய பிரார்த்தனை பாடல்கள், சிறு தெய்வ வழிபாடு, பறைகள் போன்ற வாத்திய கலைகள் கொண்டவையாகும். நாட்டார் பண்பாட்டின் அடுத்தகட்டம்தான் செவ்வியல் இலக்கியங்கள். இந்த செவ்வியல் இலக்கியங்கள் என்பது இலக்கியங்கள், பழமொழிகள், புதிர்கள், கவிதைகள் கொண்டவையாகும். அவ்வாறு பல இனக்குழுக்களின் நாட்டார் பண்பாடும் + செவ்வியல் இலக்கியங்களும் சேர்ந்து காணப்படும் ஒரு நூல்தான் வேதமாகும். அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் மற்றும் கவி...

மார்க்சிசமும் அத்வைதமும்

Image
மார்க்சிசத்தில் alienation(அந்நியப்படுதல் ) என்ற தத்துவம் உண்டு. சமூகம் நிலவுடைமையில் இருந்து தனிச்சொத்துடைமை(முதலாளித்துவம்) நோக்கி நகரும்போது அங்குள்ள பாட்டாளிவர்க்கம் தனது வாழ்க்கை தேவைகளுக்கு உடல் உழைப்பை மட்டும் கட்டாய மூலதனமாக குடுத்து தான் உருவாக்கும் உற்பத்தி பொருட்களிலிருந்து முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.  உற்பத்தி, மூலப்பொருள் மற்றும் உபரி உற்பத்தி இவற்றில் எதிலுமே உழைக்கும் வர்க்கத்தின் உறவுகள் இல்லாமல் அந்நியப்படுத்தப்படுகிறது. ஆனால் தனிச்சொத்துடைமைக்கு முந்திய நிலவுடமை சமூகத்தில் ஒரு கைவினை பொருளை தயாரிக்கும் ஒருவன் அப்பொருளின் மூலதனம், பொருளை உருவாக்கும் செய்முறை மற்றும் விற்றல் என்று தானே சுயத்துடன் ஈடுபட்டு அந்த பொருட்கள் உடனான முழு உறவும் மற்றும் வேலை நிறைவும் பெறுகிறான்(work satisfaction). ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மனிதன் தனது சுயம், படைப்பு திறன் மற்றும் ஆர்வம் இவற்றில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு அவன் வெறுக்கும் வேலையை வெறும் பிழைப்புக்காகச் செய்ய வேண்டிய கட்டாயத்திருக்கு உட்படுத்தப்படுகிறான். அதுமட்டும் அல்லாமல் இயந்திரமயமாக்களில் மு...

Matrix vs Advaita Vedanta

Image
1999 களில் வெளிவந்த matrix படத்தின் கதையானது ஹிந்து தத்துவமரபில் வரும் அத்வைத வேதாந்தத்துடம் ஒத்துப்போகும்.  படத்தில் AI Machine கள் ஒரு Virtual உலகத்தையும் அதில் மனிதர்களை தனது power source க்காகவும் உருவாக்கும். முழுவதுமே மாயை என்று அறியாவண்ணம் அங்கு உள்ள மனிதர்கள் கணினியின் virtual simulation னால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள். அதில் வரும் neo என்ற கதாபாத்திரம் கணினியால் உருவாக்கப்பட்ட Virtual உலகத்தில் மனிதர்கள் உழல்கிறார்கள் என்று உண்மையை உணர்ந்து. அந்த Virtual Simulation கட்டுப்படுத்தும் மெஷினை அழித்து அங்கு உள்ள மனிதர்களை எப்படி நிஜ உலகத்திற்க்கு கொண்டு வருகிறார்கள் என்பதே matrix ன் கதை கருவாகும். சங்கரின் அத்வைதத்தின்படி முழுமுதன்மையான பிரம்மம் மட்டும் மெய் மற்றவை எல்லாம் மாயையை என்கிறது. நாம் காணும் பிரபஞ்சம் என்பது பிரமத்திலிருந்து உருவானவை அல்ல மாறாக நமது பிரபஞ்சமே பிரம்மம்தான். நமது புறஉலகம் என்பது உண்மையான ஒன்றுதான். ஆனால் அதன் குணங்கள், சாரங்கள், வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது.  அத்வைதம் என்பதே இரண்டற்றா நிலையாகும்(Non Duality). அனைத்துமே ஒற்றை ...