Posts

Showing posts from June, 2021

அய்யா வைகுண்டர்

Image
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்று தாழ்த்தப்பட்டவர்களின் சமத்துவத்திற்கு போராடியவர் அய்யா வைகுண்டர். அய்யா அவர்களின் முக்கியமான முழக்கம் ஒரே குலம் ஒரே  மதம் ஒரே கடவுள் என்பதாகும். அய்யாவின் ஆன்மிக வழியிலான சுயமரியாதை, சமபந்தி போஜனம், சமத்துவம், தீண்டாமையை எதிர்த்தல் மற்றும் உருவ வழிபாட்டுக்கு பதில் கண்ணாடி வழிபாடு போன்ற சமூக புரட்சிகள் "அய்யா வழி" தரிசனங்களாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மார்க்சிசமும், காந்தியிசமும் முக்கியமான கொள்கைகளாக முளை விடுவதற்கு  அதிக நாட்களுக்கு  முன்பாகவே நம்முடைய நாட்டில் விதைவிட்ட மகத்தான ஒரு வாழ்வியல் தத்துவ முறை "அய்யா வழி".  அய்யா வைகுண்டர் 1809 இல் பொன்னுமாடன் நாடார் வெயிலால் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் மற்றும் அவருக்கு “முடிசூடும் பெருமாள்” என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அழகான பெயர்கள் சூட்டா அக்காலத்தில் அவர்ணர்களுக்கு உரிமை இல்லை மற்றும் உயர் சாதியினர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் பின்  "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றப்பட்டது. முத்துக்குட்டி குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் அதிக...

வள்ளலார்

Image
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" என்று பாடியவர் வள்ளலார் மற்றும் பிறர் துன்பம் கண்டு உருகுபவர்.  சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையா பிள்ளை சின்னம்மையார் தம்பதியருக்கு 1823ம் ஆண்டில் ஐந்ததாவுது குழந்தையாக பிறந்தவர் வள்ளலார். இராமலிங்கம் என்பது இவரின் இயற்பெயர். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.  உருவ வழிபாட்டுக்கு மாற்றாக தீப ஒளிச்சுடரை வழிபடும் முறையை அறிமுகம் செய்தவர் வள்ளலார் மற்றும் எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்டுவதே இறையுணர்வு பெறுவதற்கு வழி என்று முன்வைத்தவர். இவர் தனது ஆன்மிக மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு சன்மார்க்க சங்கம்,  சன்மார்க்க சத்திய தருமச்சாலை மற்றும் சன்மார்க்க சத்திய ஞான சபை என்ற அமைப்புகளை துவங்கினர்.  சன்மார்க்க சங்கம் 1865 இல் ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற ஆன்மிக சங்கத்தை தொடங்கினர். இதன் நோக்கம் தனது ஆன்மிக கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்வதாகும். கடவுள் ஒருவர். ஒருவராகிய அந்தக் கடவுளை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும்.  இதன் அடிப...

பண்ணை அடிமைகள்

Image
"பண்ணை அடிமைகள்" என்னும் இந்நூலை கொல்லால் எச். ஜோஸ் 1860ம் ஆண்டு வாக்கில் தஞ்சாவூரை சுற்றி கிராமம் ஒன்றில் நிலவிய நிலவுடமை சமூகத்தின் பண்ணை அடிமை முறையை வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் புனைந்து எழுதியுள்ளார். ஜோஸ் அந்த  கிராமத்தில் நிகழ்ந்த அடிமைமுறை நிகழ்வுகளை தனது எழுத்துக்களால் நாம் கண் முன்னே நிறுத்துகிறார். நான் இதில் உள்வாங்கியது கதையைவிட நிலவுடமை சமூகத்தில் நிலவிய அடிமைகளின் வாழ்க்கை முறையும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் தான். அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.  சூரியன் உதிப்பதில் இருந்து மறையும்வரை அடிமைகள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் வாரத்தின் ஏழு நாளும் உழைக்கவேண்டும். அடிமைகளின் பிள்ளைகள் ஆணென்றாலும், பெண்ணென்றாலும் எட்டு வயதுவரையேனும் ஆடைகளின்றிச் சுற்றித் திரிவதே வழக்கம். அடிமைகளின் பிள்ளைகள் 10 வயதை தொட்டுவிட்டால் ஆண்டையனின் வீட்டு வேலைக்கு செல்ல வேண்டும் மற்றும் வயது 14 நிறைவு பெற்றவுடன் அவர்கள் வீட்டு வேலையில் இருந்து வயல் வேலைக்கு நகர்த்தப்படுவர்.  அடிமைகள் தங்கள் கல்யாணத்திற்காக  ஆண்டையிடம் இருந்து பணம் பெறும் போ...

ஆரிய சமாஜம்

Image
ஆரிய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதிகளால் அவர்களால் 1875 இல் தொடங்கப்பட்ட இயக்கமாகும். எப்படி தென்பாரதத்தில் திருமாலினை அடிபணியும் அனைவரும் ஒரே சாதியினர் அவர்களுக்கிடையே வேறுபாடுகள் கிடையாது என்று ராமானுஜர் முன்வைத்தாரோ அதே வழியில் வடக்கில் உதித்தவர் தயானந்த சரஸ்வதிகள். இவரின் அடிப்படை கொள்கைகள் ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் சம்பிரதாய வேறுபாடுகளை களைந்து வேதகால மரபான சனாதன தர்மத்திற்கு திரும்பவேண்டும் என்கிறது. குணாதிசிய அடிப்படையிலான சதுர்வர்ணத்தை ஏற்கிறதே தவிர பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தையும் மற்றும் சாதிய கட்டமைப்புகளையும் ஏற்பதில்லை. இவரின் ஆரியா சமாஜம் சமூக தளத்தில் கலப்பு திருமணம், சமபந்தி போஜனம், சாதிய ஒழிப்பு, பிற மதத்திற்கு மாறிய ஹிந்துக்களை தாய் மதத்துக்கு திரும்ப செய்வது மற்றும் விக்கிரக வழிபாட்டு முறையை மறுப்பது என்று இயங்கிவருகிறது. ஆரிய சமாஜம் வேள்வித் தீ வழியே அருவ வழிபாட்டுக்கு உகந்தது என்கிறது. இன்று  ஹிந்துக்களிடையே உள்ள உருவ வழிபாடு, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை விட்டுவிட்டு வேதகால சனாதன தர்மத்தை கடைபிடிக்க சொல்கிறது ஆரிய சமாஜம் மற்றும் இவை அனைத்தும் பிற...

விலங்கு பண்ணை

Image
விலங்கு பண்ணை என்னும் நாவலை ஜார்ஜ் ஆர்வெல் ரஷ்யா புரட்சியை உருவகப்படுத்தி எழுதியுள்ளார்.  இதில் ஜோன்ஸ் கிராமப்புறத்தில் ஒரு பண்ணையின் உரிமையாளராக வருகிறார். ஒரு நாள் இரவு ஓல்டு மேஜர் என்னும் பன்றி விலங்குகளிடையே கூட்டத்தை கூட்டி புரட்சிக்கான உரையை ஆற்றியது. அதில் மனிதன் நமது உழைப்பின் மூலம் உருவாகும் உற்பத்தி பொருட்களை எடுத்து கொண்டு நம்மை  அடிமைப்படுத்துகிறான் என்றது மற்றும் தனது கனவில் தோன்றிய புரட்சி பாடலையும் பாடி காட்டியது. அன்றிலிருந்து மூன்றாவது நாள் ஓல்டு மேஜர் இறந்து போனது. புரட்சியானது பன்றி, ஆடு,  மாடு, குதிரை, கோழி மற்றும் வாத்து போன்ற பண்ணை விலங்களுடையே பரவியது. ஒரு நாள் பண்ணைவிலங்குகள் புரட்சி செய்து உரிமையாளர் ஜோன்ஸை விரட்டிவிட்டு பண்ணையை கைப்பற்றி கொண்டன. ஓல்டு மேஜருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகள்  பண்ணை விலங்குகளை வழிநடத்தின. அதில் ஸ்னோபால் அறிவுத்திறன் வாய்ந்ததாகவும் மற்றும் நெப்போலியன் தான் நினைத்தை சாதிக்கும் தன்மை  கொண்டதாவும் வருகிறது. புரட்சியின் மூலம் கைப்பற்றிய அந்த கிராமத்து பண்ணை விலங்கியல் பண்ணை ...

சாதிகள்

Image
இந்தியாவில் ஒரு சாதி தலைவரால் கூட்டக்கூடிய மக்கள் திரளை வர்க்க அடிப்படையிலோ அல்லது சித்தாந்த அடிப்படையிலோ மக்களை கூட்ட முடிவதில்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் சாதி இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சீக்கியர் மற்றும் முகமதியர் போன்ற மதங்களில் சாதிகள் போன்ற உட்ப்பிரிவுகள் இருபினும் அது இந்து மதத்தில் உள்ளது போல் முக்கியத்துவம் பொருவதில்லை. இந்து மதத்தில் சாதி என்பது புனிதமாக கருதப்படுவதும் மற்றும் அதற்கு விதிகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் சமூகம் இயங்குவதே காரணம். பொதுவாக இந்தியாவில் சாதிகளின் எவ்வாறு உருவாகின என்பனபற்றி பல யூகங்கள் உள்ளன. அவை கடவுளால் உருவாக்கப்பட்டது, வேதங்களில் இருந்து தோன்றியது, தொழில்கள் அடிப்பட்டையில் உருவானது மற்றும் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் அம்பேத்கர் இதை "இந்தியாவில் சாதிகள்" என்ற நூலில் எவ்வாறு சாதிகள் உருவாகியிருக்கும் என்று மூன்று கேள்விகளின் அடிப்படையில் கூறுகிறார். சாதி எவ்வாறு நிலைத்து நிற்கிறது ? எவ்வாறு உருவாகியது? சாதியின் தோற்றுவாய் எது ? சாதி வேலியை தனக்கு தானே முதலில் கட்டமைத்துக்கொண்ட வர்க்கம் எது ? சாதி...

காந்தியும் கம்யூனிசமும்

Image
காந்தியிமும் கம்யூனிசமும் நேர் எதிரான நிலைப்பாட்டை கொண்ட சித்தாந்தங்கள். காந்தியை பொறுத்தவரை இலக்கை அடைவதற்கு அகிம்சையே பிரதான வழி ஆனால் கம்யூனிசமோ  அதற்கு நேர் எதிராக வன்முறையை பிரதானமாக கொண்டது. காந்தியின் போராட்டம் என்பது முதலில் சமூக தளத்திலும் அதன்பின் அரசியல் தளத்திலும் படிப்படியாக நிகழும் மாற்றங்கள் ஆகும். ஆனால் கம்யூனிச போரட்டம் என்பது வன்முறையின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி மொத்த சமூக அமைப்பையும் பொருளியல்ரீதியாக மாற்றி அமைப்பது.  உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்று எல்லாவற்றையும் அணுகக்கூடியவர் காந்தி. அவரது கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் விவாதங்கள் அடிப்படையில் சமரசத்திற்கு உட்பட்டவை. ஆனால் கம்யூனிசமோ எந்த ஒரு சமரசத்தையும் தனது சித்தாந்த அடிப்படையில் ஏற்காது, மேலும் தனக்கு தடையாக உள்ள அனைத்தையும் அழித்தொழிப்பு செய்யவே சொல்லுகிறது. கம்யூனிசத்தில் வன்முறையை நீக்கிவிட்டு சமரசத்திற்கு உட்படுத்தினால் அது காந்திசத்திலேயே வந்து நிற்கும்.  பொருளியல் மற்றும் சித்தாந்த அடிப்படையில் இவ்விரண்டிற்கும் உள்ள நிலைப்பாட்டை பார்ப்போம்.  பொருள்முதல்வாதம்   மார்க்ஸின் ...