இந்து ஞான மரபு
இந்து ஞான மரபு என்பது வெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் இறை வழிபாட்டை மட்டும் கொண்டதல்ல மாறாக அவை பல தத்துவங்களையும் தரிசனங்களை சிந்தனைகளையும் நீதி நூல்களையும் தன்னகத்தே விவாதித்து உருவானவை. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்கள் அனைத்தையும் பகுத்துபார்ப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறை உள்ளது. அந்த முறையில் இந்து ஞான மரபை அணுகினால் எளிதாக புரிந்து கொள்ளலாம் அதன் அடிப்படைகளை. எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும் அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்தபடிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே, நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள் இதே முறையிலே தான் பழமைவாய்ந்த இந்திய, கிரேக்...