வைசேஷிகம்
அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது. கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும். வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சு...