Posts

Showing posts from October, 2021

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

Image
இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும் தரிசங்களையும் உள்ளடக்கியவை. நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. இப்பிரபஞ்ச தோற்றத்தை வகுத்துக்கொள்ள பல தத்துவங்கள் உருவாகின, அந்த தத்துவங்கள் விரிவடைந்து தரிசனங்களா மாறின, தரிசனங்கள் ஒரு எல்லையில் இறைவழிபாடாக மாறி மதங்களானது. இப்படி இந்திய ஞான மரபில் உருவான மதங்கள்தான் ஷண்மதம், சமணம் மற்றும் பௌத்தமாகும். முதலில் தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் உருவாகுகின்ற தர்க்களின் தொகுப்பாகும். தர்க்கரீதியாலான சிந்தனைகளின் தொகுப்பே தத்துவமாகும். ஒரு தத்துவ சிந்தனையில் உருவான கருத்து சித்தாந்தமாக விரிவடைந்து, பிற அறிவு துறைகளில் உள்ளவற்றையும் விளக்க முற்படுவதே தரிசனமாகும். இந்த தரிசனங்கள் இந்து மெய் ஞானங்களின் வரிசையேயாகும். இந்து ஞான மரபு என்பது தரிசனங்கள் தனது கற்பனை மற்றும் உள்ளுணர்வால்  விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தே...

வேதாந்தம் | உத்தரமீமாம்சம்

Image
வேதத்தின் அந்தம்தாம் தான் வேதாந்தமாகும். அதாவுது வேதத்தின் இறுதியில் வருவது என்று பொருள். இந்து மத அனைத்து சமய வழிபாடுகளிலும் வேதாந்தத்தின் தத்துவார்த்தம் காணப்படும். வேதாந்தத்தின் முக்கிய தேடல் இப்பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கத்திற்கு முக்கிய மூல காரணமாக இருக்கும் பிரம்மத்தை பற்றியதேயாகும். வேதாந்தங்கள் உபநிஷங்கள் மற்றும் பிற பௌதிக தத்துவ தரிசங்களுடன் விவாதித்து தம்மை வளர்த்து கொண்டவை. இத்தரிசனம் வேதங்களை ஏற்று கொண்டாலும் அதில் உள்ள சடங்குகளை ஏற்பதில்லை. பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே வேதாந்தங்கள் முன்வைக்கின்றன. அதனால் இதை பிரம்ம மீமாம்சை அல்லது ஞான மீமாம்சை என்று குறிப்பிடுவார்கள். வேதாந்த மரபினை தொகுத்தவர் குரு பாதராயணர் ஆவர் மற்றும் இவர் கிமு நான்காம் நூற்றாண்டுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பிரம்மசூத்திரங்கள் என்ற நூலே வேதாந்தத்தின் முக்கிய நூலாகும். வேத வியாசர்தான் வேதாந்தத்தின் முதல் குரு என்ற நம்பிக்கையும் உண்டு. இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே....

பூர்வமீமாம்சம்

Image
இந்து மதங்களிலோ அல்லது இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் இல்லை. அவை பல நூல்களை கொண்டவை மற்றும் இதுதான் மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் அதன் மையநூலக பைபிள் மற்றும் குரானை வைத்து வளர்ந்தவை. இப்படி மையநூலை வைத்து இயங்குவது செமிட்டிக் மதங்களின் இயல்பாகும். அப்படி வேதங்களை மூலநூல்களாக கொண்டு வளர்ந்தவை பூர்வமாம்சமாகும். இந்தியா தத்துவ மரபில் மையநூல்வாதம் கொண்டு இயங்கும் ஒரே தத்துவ தரிசனமும் பூர்வமீமாம்சம் மட்டுமே.  பூர்வமீமாம்சம் என்பது வேதங்களை அடிப்படையாக கொண்டு வேள்விகளை சடங்குகளையும் நடத்துவதாகும். வேள்வி மற்றும் சடங்குகளை செய்வதே இதன் முதன்மையான கர்மமாகும். இந்த தரிசனம் சடங்கு செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகள் பற்றியே விவரிக்கிறது(செயல் - விளைவு). இது புரோகித மரபு என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வமீமாம்சத்தை தொகுத்தவர் ஜைமினி என்று குரு ஆவர் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டகாலமாக  இருக்கலாம். பூர்வமீமாம்சம் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்ற நான்கு அடி...

பெண் ஏன் அடிமையானாள்?

Image
எப்போது ஒரு சமூகம் நிலவுடைமையில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகருகிறதோ அப்போது அச்சமூகத்தில் நிகழும் பிற மாற்றங்களுடன் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் சம உரிமையும் தானாகவே நிகழும். மேற்கத்திய தொழிற்புரட்சி மற்றும் பிரெஞ்சு புரட்சிக்கு பின்புதான் பெண்ணியம் என்ற வார்த்தையும், பெண்கள் உரிமை சார்ந்த போராட்டங்களும் வலுப்பெற தொடங்கின. உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்ணிய போராட்டங்களை First Wave Feminism(1848 - 1920), Second Wave Feminism(1963 - 1980)  மற்றும் Third Wave Feminism(Post Feminism - 1980 to present) என்று மூன்று கால அளவுகளில் வகைப்படுத்துவார்கள். இப்பெண்ணிய போராட்டங்கள் மேற்கத்திய தொழிற்புரட்சியின் தொடர்விளைவேயாகும். ஆனால் தமிழ் நாட்டில் பெண்ணிய விடுதலைக்கு பெரியாரும் திராவிடமும் தான் காரணம் என்றரீதியில் கட்டமைக்கிறார்கள். பெரியார்தான் காரணம் என்றால் டெல்லி மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தது எவ்வாறு? பெரியாரா அல்லது அங்கு நிகழ்ந்த தொழில்துறையின் வளர்ச்சி காரணமா? அதேபோன்று தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கும் பெண்களின் சுதந்திரமும் நிலவு...

நியாயம்

Image
எந்த ஒரு தத்துவம் அல்லது சிந்தனைக்கும் தனக்கேயுரிய தர்க்க முறை இருக்கும் அதன் சிந்தனைகளை வகுத்து கொள்ள. அப்படி இந்திய ஞான மரபு வளர்த்து எடுத்த தர்க்கமுறைதான் நியாயம் ஆகும். நாம் தினமும் பயன்படுத்தும் நியாயம் என்ற வார்த்தை கூட இந்த நியாய தரிசனத்தில் இருந்து தோன்றியது தான். நியாயம்  வைசேஷிகத்தின் உப தரிசனமாகும் மற்றும் இதுவும் பௌதீகவாத தரிசனமாகும். பின்னர் வந்த தரிசனங்களும் நியாய தரிசனத்தை உள்வாங்கி கொண்டு தர்கரீதியில் விவாதித்து தங்களது சிந்தனைகளை வளர்த்தெடுத்தன. இந்த நியாய மரபுக்கு எதிராக வந்த வேதாந்தமும் சரி, பௌத்த மற்றும் சமண மரபுகளும் சரி நியாய தருகத்தையே கையாளுகின்றன. இதை பின்னர் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்கள்  பௌத்தர்களே. நியாயத்தை இந்தியத் தர்க்கவியல்(Indian Logic) என்றும் அழைக்கலாம். இந்த நியாய தரிசனத்தை தொகுத்தவர் கௌதமர் ஆகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவராக இருக்கலாம். பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்னும் வைசேஷிக கோட்பாட்டை நியாயம் ஏற்கிறது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவு இல்லாமையால்தான் நாம் சமநிலை இழந்து வியப்பு, பயம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவை உர...