மார்க்சிசமும் அத்வைதமும்
மார்க்சிசத்தில் alienation(அந்நியப்படுதல் ) என்ற தத்துவம் உண்டு. சமூகம் நிலவுடைமையில் இருந்து தனிச்சொத்துடைமை(முதலாளித்துவம்) நோக்கி நகரும்போது அங்குள்ள பாட்டாளிவர்க்கம் தனது வாழ்க்கை தேவைகளுக்கு உடல் உழைப்பை மட்டும் கட்டாய மூலதனமாக குடுத்து தான் உருவாக்கும் உற்பத்தி பொருட்களிலிருந்து முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படுகிறார்கள். உற்பத்தி, மூலப்பொருள் மற்றும் உபரி உற்பத்தி இவற்றில் எதிலுமே உழைக்கும் வர்க்கத்தின் உறவுகள் இல்லாமல் அந்நியப்படுத்தப்படுகிறது. ஆனால் தனிச்சொத்துடைமைக்கு முந்திய நிலவுடமை சமூகத்தில் ஒரு கைவினை பொருளை தயாரிக்கும் ஒருவன் அப்பொருளின் மூலதனம், பொருளை உருவாக்கும் செய்முறை மற்றும் விற்றல் என்று தானே சுயத்துடன் ஈடுபட்டு அந்த பொருட்கள் உடனான முழு உறவும் மற்றும் வேலை நிறைவும் பெறுகிறான்(work satisfaction). ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மனிதன் தனது சுயம், படைப்பு திறன் மற்றும் ஆர்வம் இவற்றில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு அவன் வெறுக்கும் வேலையை வெறும் பிழைப்புக்காகச் செய்ய வேண்டிய கட்டாயத்திருக்கு உட்படுத்தப்படுகிறான். அதுமட்டும் அல்லாமல் இயந்திரமயமாக்களில் மு...