Posts

Showing posts from July, 2021

இந்துத்துவா − வரலாற்றுப்பார்வை

Image
இந்துமதம் பற்பல தத்துவத் தருக்கள் அடங்கிய தத்துவவனம்! தத்துவ உரையாடல்களின் வழியே தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டிருக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஞானச்சோலை, இந்துமதம்! அது தன் அறிதல்களை முதன்மையாக முன்வைப்பதாலேயே ஆயுதந்தாங்கிய மடத்தலைவர்களை இதுவரை அனுமதித்ததில்லை, இனியும் ஆதரிக்க வாய்ப்பில்லை! சமகால இந்திய மதங்களான பௌத்தம், சமணம் போன்றவற்றை அறிந்து அதனோடு உரையாடி தம்மைப் புதுப்பித்துக் கொண்ட வரலாற்றையுடையது இந்துமதம்! பழங்குடியின நாக, அசுரவேதங்களில்  துளிர்த்த இந்துமதத்தின் ஞானமரபு, வேளாண்குடியினரின் நால்வேதங்களில் நிலைகொண்டு அனைத்து உயிர்களுக்குமான வேதாந்தமாகக் கனிந்து மென்மேலும் வளர்ந்து கொண்டுள்ளது! வழிபாட்டு மரபினை ஆறு தரிசனங்களாக ஆதிசங்கரர் தொகுத்தார். அவையாவன சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம்! தத்துவ தரிசனங்களும் ஆறுமரபாகத் தொகுக்கப்பட்டுள்ளன! அவையாவன சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், உத்தரமீமாம்சை, பூர்வமீமாம்சை! இவை பல்லாயிரக்கணக்கான குருமரபுகளின் மூலமாக பல்லாரயிமாண்டுகளாாக உரையாடலின் மூலம் தொகுக்கப்பட்ட ஞானக்களஞ்சியம்!  இந்துமத்தின் தத...

Feminism

Image
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள் தங்களுக்கான சம உரிமையை கோருவதே feminism ஆகும். மேற்க்கத்திய நாடுகளில் 1550 முதல் பெண்ணிய இலக்கியங்கள் சமுக தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், feminism என்ற வார்த்தை 1837 இல் Charles Fourier(utopian ideologist) என்னும் பிரெஞ்சு எழுத்தாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த ஒரு குழுவோ, இனமோ இல்லை சாதியோ சமூக அங்கீகாரத்தை பெற முயலும் போது தனக்கான வரலாற்று உணர்வை உருவாக்க முனையும். அதைப்போலத்தான் பெண்ணியமும் 16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனக்கான அங்கீகாரகத்தை பெற தனது கருத்துக்களையும் இலக்கியங்களையும் சமூக தளத்தில் விவாதிக்க தொடங்கியது. இதன் தொடர்விளைவே 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பெண்ணிய போராட்டங்கள்.  இச்சமூகத்தில் ஆண் வலிமையானவனாக கருதப்பட்டதால் அவன் வேலைக்கு செல்லுதல் என்று பொருளாதாரம் சார்ந்து இயங்கினான். பெண்கள் குடும்ப வேலைகள், இன உற்பத்தி மற்றும் குழந்தைகளை பராமரித்தல் என்று குடும்பம் சார்ந்து இயங்கினாள்!. இது நிலவுடமை சமூகம் வரைக்கும் இதே முறையில்தான் இயங்கியது. ஏனென்றால் நிலவுடமை சமூகம் வரைக்கும் வேலை என்பது கடின உடல் உழைப்ப...

ராஜாராம் மோகன்ராய்

Image
சதி என்னும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர் ராஜாராம் மோகன்ராய். "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்றும் அழைக்கப்படுகிறது. இவர் 1772 இல் மேற்கு வங்கத்தில் ஹூக்ளி என்னும் மாவட்டத்தில், ராம்காந்தோ ராய், தாரிணி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். பிராமணிய குடும்பத்தில் பிறந்த மோகன்ராய் வேதங்களையும்,  உபநிஷங்களையும் முறையாக கற்றறிந்தபோதிலும் உருவழிபாட்டை கடுமையாக எதிர்த்தார் மற்றும் வேதங்கள் உருவ வழிபாட்டை பற்றி  எங்கும் குறிப்பிடவில்லை என்று வாதிட்டார். பெற்றோர்களோ உருவவழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். கடைசியில் தந்தையிடம் வாதிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  வீட்டை விட்டு வெளியேறிய அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். அங்கு பௌத்தர்கள் தலாய் லாமாவை பூஜிப்பதை(உருவ வழிபாடு செய்வதை) கண்டு அதை எதிர்த்தார். அவரின் பிரச்சாரங்களால் பௌத்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவர் வீடு திரும்பினார் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்...

1984

Image
"1984" என்னும் நூலை ஜார்ஜ் ஆர்வெல் தனது காலகட்டத்தில் நடந்த ரஷ்யா ஸ்டாலின் மற்றும் ஜெர்மனின் ஹிட்லர் சர்வாதிகாரத்தை வைத்து 1984 கால கட்டத்தில் எப்படி உலக வல்லரசுகள் தனது மக்களை சர்வாதிகார போக்குடன் அடக்கி ஆளும் என்பதை புனைந்து 1949 இல் எழுதப்பட்ட நாவல் ஆகும். இரண்டாம் உலக போருக்குப்பின்னான  பனிப்போரின் காலகட்டத்தில் உலக நாடுகள் தங்களை சித்தாந்தம் அடிப்படையில் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகள்,  சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் மற்றும் அணிசேரா நாடுகள் என்று மூன்றாக பிரிந்துகொண்டனா. அதன் அடிப்படையில் இந்நாவலில் ஓசியானியா, யூரேசியா மற்றும் ஆசியா என்ற மூன்று வல்லரசுகள் வரும் மற்றும் இதன் கதை களம் என்பது ஓசானியாவில் நடைபெறும்.  இதில் ஓசியானியா என்பது அமெரிக்கா, பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கியது. அதேபோல் யூரேசியா என்பது சோவியத் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள். ஆசியா என்பது இந்தியா சீனா முதல் ஜப்பான் வரை உள்ளடக்கியது. இதில் ஓசியானியாவில் ingsoc(இங்கிலிஷ் சோசியலிசம்) என்னும் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இது அப்படியே சோவியத்தில் நடைபெற...