வைதீகம்

இந்தியா ஞான மரபினை வைதீகம், அவைதீகம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். வேதங்களை மூல நூலக ஏற்கும் பிரிவு வைதீகம் என்றும். வேதங்களை முற்றிலும் மறுக்கும் தரப்பு அவைதீகம் என்றும் பிரிக்கப்படுகிறது.

இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால் வைதீக மரபின் அடிப்படையான வேதம் உருவான தொடகத்தை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு சமூகரீதியாக முன்னேறும் இனக்குழுக்களின் தொடக்கப்புள்ளி நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கா முடியும். இந்த நாட்டார் பண்பாடு என்பது பல சடங்குகள், நம்பிக்கைகள், எளிய பிரார்த்தனை பாடல்கள், சிறு தெய்வ வழிபாடு, பறைகள் போன்ற வாத்திய கலைகள் கொண்டவையாகும். நாட்டார் பண்பாட்டின் அடுத்தகட்டம்தான் செவ்வியல் இலக்கியங்கள். இந்த செவ்வியல் இலக்கியங்கள் என்பது இலக்கியங்கள், பழமொழிகள், புதிர்கள், கவிதைகள் கொண்டவையாகும். அவ்வாறு பல இனக்குழுக்களின் நாட்டார் பண்பாடும் + செவ்வியல் இலக்கியங்களும் சேர்ந்து காணப்படும் ஒரு நூல்தான் வேதமாகும்.

அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் மற்றும் கவிதை தன்மை உடைய செவ்விய இலக்கியங்களை உடையவையாகும். அச்சமூகம் இயற்கையை இறையாக உருவகம் செய்து இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். அதே சமயம் அவர்கள் இப்பிரஞ்சத்தில் நடப்பவற்றை எல்லாம் வியந்து கவிதைகளாக பாடினார். ஒரு கட்டத்தில் அந்த பிரபஞ்ச வியப்பு சக்தியை பிரம்மம் என்று ஒலித்தனர். அதிலிருந்து பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பிரம்மத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. இதுவே வேதம் மற்றும் இந்து ஞான(வைதீக) மரபின் உச்சம் எனப்படுகிறது. இதிலிருந்தே இந்து ஞான மரபின் அனைத்து தத்துவங்களும் பிரபஞ்சத்தை பற்றி அறியும் பிரம்மத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

இங்கு இருந்துதான் இந்தியா ஞான மரபின் தத்துவார்த்தரீதியான விவாதம் தொடங்கி வைதீக அவைதீக மரபு என்று இரண்டாக பிரிகிறது. 

வேதம் முன்வைத்த பிரம்மம், ஆத்மா, மோட்சம், கடவுள், சடங்குகள், கர்மா போன்றவற்றை ஏற்று விவாதித்து வளர்ந்த ஒரு பகுதி வைதீகம் அல்லது வேத மரபு எனப்படுகிறது. அந்த வைதீக(வேத) மரபின் கிளைகள் முறையே,

1. மூன்று தத்துவங்கள்
(பிரஸ்தான திரயம்) - கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம்.

2. ஆறு தரிசனங்கள் - சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்.

3. ஆறு மதங்கள் - சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்

மற்றும் இவற்றை தழுவி உருவான சாஸ்திரங்கள், புராண நீதிநூல்கள், சித்தாந்தம், வேதாந்தம், ஆகமங்கள், திருமறைகள் ஆகிய அனைத்துமே வேதத்தின் சாரமாகும்.

இன்று இந்து மதத்தில் வழிபடும் சிவன், விஷ்னு, சக்தி போன்ற அனைத்து பெரும் தெய்வங்களும் பிரம்மத்தின் உருவகமே(சகுண பிரம்மம்).

இவற்றுக்கு நேர் எதிராக வேதம் முன்வைத்த பிரம்மம், ஆத்மா, சடங்குகள் போன்றவற்றை மறுத்து விவாதித்து உருவான தத்துவங்களே அவைதீக மதங்களான ஆசீவகம், சார்வாகம்(லோகாயுதம்), சமணம் மற்றும் பௌத்தம் போன்றவையாகும். இவை நாஸ்திக மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்