ஆதிசங்கரரின் அத்வைதம்

 கடவுளும் அணைத்து உயிரினங்களும் சமம் என்ற வகையில் கடவுளிடம் சாமானியனை நெருக்கமாக கொண்டு சேர்த்த தத்துவம்தான் ஆதிசங்கரரின் அத்வைதம். 


சங்கரரின் காலத்தில் இந்து மரபு சமண பௌத்த தத்துவங்களின் தாக்கத்தாலும் கர்ம மார்க்கத்தின் சடங்குகளாலும் திசைமாறி 

சிதறுண்டது. இவ்வாறு சிதறுண்ட கிடந்த இந்து மரபை ஒருங்கிணைத்து காலத்திற்கு ஏற்ப தனது ஞான மார்க்கத்தின் மூலம் கட்டி எழுப்பியவர் சங்கரர். பௌத்ததின் உயரிய கருத்துக்களையும் வேதத்தின் ஞான காண்டத்தையும் உள்வாங்கிக்கொண்டு உருவான தத்துவமே அத்வைதமாகும்.


சங்கரரின் அத்வைத தத்துவம் என்பது,

பிரமம்மும் ஆத்மாவும் ஒன்றே இரண்டல்ல என்பதாகும்(Non duality state). ஜீவாத்மா இந்த மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் நிலையானது என்று தான் என்ற அகந்தையில் பிரம்மத்தால் உருவான மாயையில் சிக்கிக்கொண்டு உழல்கின்றது. எப்பொது ஜீவாத்மா தன்னை தானே உணர்ந்து(self realize) தான் பிரம்மத்தின் ஒரு அங்கம் என உணர்கிறதோ அப்போதே இந்த பிரபஞ்ச மாயையில் இருந்து விடுபட்டு முக்தி(liberal) அடைகிறது.


இதை இன்றைய காலகட்டத்திருக்கு ஏற்ப புரிந்துகொள்ளவேண்டும் என்றால் பிரம்மம் என்பதை X என்ற unknown variable ஆகவும் Y என்பதை ஜீவாத்மா என்ற unknown variable வும் எடுத்து கொள்ளவும். அணு பெருவெடிப்பு(big bang) கொகையின் படி அடர்த்தி அதிகமான ஒரு singularity paritcle வெடித்து சிதறி பிரபஞ்சம் உருவானது என்கிறது. இதில் X என்பது அந்த அடர்த்தி மிகுந்த singularity paritcle ஆகும், அதேவே பிரபஞ்ச சக்தி அல்லது பிரம்மம் எனலாம். Y என்பது அதில் இருந்து உருவான உயிரினங்களின் உள்ளுணர்வு . Y is subset of X. ஆக ஜீவாத்மா(Y) என்பது பிரம்மத்தின்(X) ஒரு அங்கமே. எப்போது ஜீவாத்மா(Y) தன்னை பிரம்மத்தின்(X) ஒரு அங்கம் என்று உணர்கிறதோ. அப்போதே ஜீவாத்தமா பிரபஞ்ச மாயையில் இருந்து விடுதலை பெறுகிறது.


இது முழுக்க முழுக்க உயர் அறிவு தளத்தில் இயங்கும் ஞான தத்துவமாகும் இதை சாமானியனிடம் கொண்டு சேர்ப்பது எளிதல்ல என்று உணர்ந்த சங்கரர் பிரம்மத்தை இரண்டாக பிரிக்கிறார். அது நிர்குண பிரம்மம் சகுண பிரம்மம் என்பதாகும். அறிவு அல்லது ஞான தேடல் உள்ளவனுக்கு நிர்குண பிரம்மத்தையும் சாமானியனுக்கு சகுண பிரம்மத்தையும் போதித்தார் ஆதி சங்கரர். இதில் நிர்குண பிரம்மம் என்பதே மேல கூறியது போல் அறிவு தேடலின் மூலம் ஜீவாத்தமா தன்னை தானே உணர்ந்து பிரம்மத்தை அடையும் நிலை. சகுண பிரம்மம் என்பது பக்தியின் மூலம் பிரம்மத்தை அடையும் நிலையாகும்.


இங்கு சங்கரரின் தத்துவம் என்பது மிகவும் புரட்சிகரமானது நானே பிரம்மம் என்றால் எனக்கு(ஜீவாத்தமாவே கடவுள் அல்லது பிரம்மம் என்று உணர்ந்தால்) எதற்கு பூஜைகள், தேவையற்ற கர்ம சடங்குகள் மற்றும் மந்திரங்கள் என்று புறக்கணித்தார்.. அவரின் ஆன்மிகம் என்பது மிகவும் எளிமையானது மற்றும் சாமானியனை சமூக தளத்தில் ஆன்மிகம் அடிப்படையில் ஒரே நேர்கோட்டில் இணைக்கக்கூடியாது. தனது அத்வைத தத்துவத்தின் மூலமே அதற்கு முன் உருவான உலகயுதாம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், சமணம் மற்றும் பௌத்த தத்துவங்களை விவாதித்து தனது தத்துவத்தை நிலைநாட்டினார். தனது இரண்டு முக்கிய வாதங்கள் மூலம் பெரும்பாலான தத்துவங்களை உடைக்கிறார். ஒன்று ஜட பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாகும் இரண்டாவுது பிரபஞ்சம் தோன்ற காரணமான மூலம் எது அதான் காரண காரியம் என்ன என்பேதே ஆகும்.


இங்கு சமூக விடுதலைக்கு போராடிய விவேகானந்தர், நாராயண குரு போன்றோர் அத்வைதால் ஈர்க்கப்பட்ட வேதாந்திகளே. மனிதர்கள் அனைவரும் சமம் வர்க்க அடிப்படையில் பாகுபாடு கூடாது என்று மேற்கத்திய marxism பேசுமுன் இங்கு கடவுளும் அணைத்து ஜீவராசிகளும் சமம் என்று போதித்தது ஆதி சங்கரரின் அத்வைத தத்துவமாகும்.

 



Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்