அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

தத்துவம் என்பது அறிவியல், ஆன்மிகம், அரசியல் என பல தளங்களில் விரிவடைந்து விவாதத்திற்கு உட்படக்கூடியது. அதுபோல, அத்வைத தத்துவமும் ஆன்மிகம், அரசியல், அறிவியல் மற்றும் பல மேற்கத்திய தத்துவங்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்வைத தத்துவம் வாழ்க்கையில் மோட்சத்திற்கான (liberation) வழியாக சுயத்தை உணர்தல் என்ற ஞான தேடலை முன்வைக்கிறது. இந்நிலையில், இந்த ஞான தேடலின் சரியான அறிவை பெறுவதற்காக ஆறு பிரமாணங்களை அத்வைத வேதாந்தம் முன்வைக்கிறது.

இந்த ஆறு பிரமாணங்கள் யதார்த்தத்தின் தன்மை, சுயம் மற்றும் non-duality ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையாக செயல்படுகின்றன. அவை:

1. பிரத்யக்ஷம் (Perception):

நேரடி உணர்வுகள் மூலம் பெறப்படும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.

  • உதாரணம்: மரத்தை காணுதல், ஒலியை கேட்குதல் போன்ற அனுபவங்கள்.
  • இவை நமது புலனுணர்வுகளால் நேரடியாக அறியப்படும் அறிவாகும்.

2. அனுமானம் (Inference):

நடந்த நிகழ்வுகள் அல்லது அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தை தர்க்கரீதியாக ஊகித்து புரிந்து கொள்வது.

  • உதாரணம்: மலை மீது புகை காணப்படும்போது, அங்கு தீ இருக்கிறது என தெரிந்து கொள்வது.

3. உபமானம் (Comparison):

உருவகம் அல்லது ஒப்பீட்டின் மூலம் அறிவைப் பெறுவது.

  • உதாரணம்: ஒரு புதிய பொருளை விளக்க அல்லது புரிந்து கொள்ள, மற்றொரு அறிந்த பொருளின் உதாரணத்துடன் ஒப்பிடுதல்.

4. சப்த ப்ரமாணம் (Verbal Testimony):

ஏற்கனவே உள்ள நூல்கள், சொற்கள் அல்லது நம்பகமான வாக்குகளிலிருந்து அறிவைப் பெறுவது.

  • உதாரணம்: வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் உள்ள வாக்கியங்களின் மூலம் ஆன்மிக ஞானம் பெறுதல்.

5. அனுபலப்தி (Non-Perception):

ஏதோ ஒன்றின் இல்லாமையை (absence) அடிப்படையாகக் கொண்டு அறிவைப் பெறுவது.

  • உதாரணம்: ஒரு அறையில் உட்பொருள் இல்லாததைக் காணாமையின் மூலம் அந்த அறையில் அது இல்லை என்று அறிதல்.

6. அர்த்தாபத்தி (Postulation):

நேரடியாக காண முடியாத ஒன்றை அதன் விளைவுகளின் அடிப்படையில் யூகித்து விளக்கமளிக்கின்றது.

  • உதாரணம்: ஒரு மனிதர் பகலில் உணவு கொள்ளவில்லை, ஆனால் ஆரோக்கியமாக உள்ளார் என்றால், அவர் இரவில் உணவுக்கொள்கின்றார் என கருதுவது.

அத்வைத பிரமாணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI):

அத்வைத தத்துவத்தின் பிரமாணங்களை போல, செயற்கை நுண்ணறிவும் (AI) தனது அறிவை பெறுவதற்கு தரவு, அல்காரிதம், வடிவமைப்புகள் மற்றும் கணிப்பொறி முறைமைகள் ஆகியவற்றை நம்புகிறது. இவை AI-யின் முடிவுகளை அறிவு பெற உதவுகின்றன.

  1. Perception (பிரத்யக்ஷம்):
    AI தனது சென்சார்கள் மற்றும் உள்ளீட்டு தரவுகளின் மூலம் சுற்றுப்புற சூழலை நேரடியாக உணர முடியும்.
  • உதாரணம்: ஒரு தானியங்கிய கார் (self-driving car) சுற்றுப்புறத்தை உணர்ந்து செயல்படுவது.
  1. Inference (அனுமானம்):
    AI, நியூரல் நெட்வொர்க் போன்ற முறைமைகளின் அடிப்படையில் தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கிறது.
  • உதாரணம்: ஒரு பொருள் காணப்படும்போது அதன் வகையைத் தீர்மானித்தல்.
  1. Comparison (உபமானம்):
    AI, மெஷின் லெர்னிங்கின் மூலம் புதிய தரவுகளை ஏற்கனவே உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்கிறது.
  • உதாரணம்: அடையாளம் காணும் மென்பொருள் (image recognition) புதிய படங்களை பழைய படங்களுடன் ஒப்பிட்டு அறிதல்.
  1. Verbal Testimony (சப்தம்):
    AI தரவுகள் மற்றும் நிரல்களில் (coded information) அடிப்படையாக இயங்குகிறது. இதன் தரவுகளை உருவாக்கியவர்கள் அல்லது தரவுத்தொகுப்புகள் நம்பகமான ஆதாரமாக செயல்படுகின்றன.

  2. Non-Perception (அனுபலப்தி):
    AI, ஏதோ ஒன்று இல்லாததின் மூலம் முடிவுகளை எடுக்க முடியும்.

  • உதாரணம்: படத்திலுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருள் இல்லாமையை உறுதிப்படுத்துதல்.
  1. Postulation (அர்த்தாபத்தி):
    AI-யின் predictive modelling மற்றும் assumption-based learning முறைகள், அர்த்தாபத்தி முறையை ஒத்ததாகும்.
  • உதாரணம்: மெஷின் லெர்னிங் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலப் பயனாளரின் நடத்தைப் பற்றிய முடிவுகளை எடுப்பது.


அத்வைத தத்துவத்தின் பிரமாண முறைகள் மிக ஆழ்ந்த தத்துவ ரீதியான விளக்கங்களை வழங்குகின்றன. AI, அதே மாதிரியான முறைமைகளைப் பயன்படுத்தினாலும், அவை எண்ணிப்பார்க்கக்கூடிய (computational) மற்றும் புள்ளிவிவர அடிப்படையிலான முடிவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை.


Comments

Popular posts from this blog

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்