1984
"1984" என்னும் நூலை ஜார்ஜ் ஆர்வெல் தனது காலகட்டத்தில் நடந்த ரஷ்யா ஸ்டாலின் மற்றும் ஜெர்மனின் ஹிட்லர் சர்வாதிகாரத்தை வைத்து 1984 கால கட்டத்தில் எப்படி உலக வல்லரசுகள் தனது மக்களை சர்வாதிகார போக்குடன் அடக்கி ஆளும் என்பதை புனைந்து 1949 இல் எழுதப்பட்ட நாவல் ஆகும். இரண்டாம் உலக போருக்குப்பின்னான பனிப்போரின் காலகட்டத்தில் உலக நாடுகள் தங்களை சித்தாந்தம் அடிப்படையில் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ நாடுகள், சோவியத் தலைமையிலான கம்யூனிச நாடுகள் மற்றும் அணிசேரா நாடுகள் என்று மூன்றாக பிரிந்துகொண்டனா. அதன் அடிப்படையில் இந்நாவலில் ஓசியானியா, யூரேசியா மற்றும் ஆசியா என்ற மூன்று வல்லரசுகள் வரும் மற்றும் இதன் கதை களம் என்பது ஓசானியாவில் நடைபெறும்.
இதில் ஓசியானியா என்பது அமெரிக்கா, பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கியது. அதேபோல் யூரேசியா என்பது சோவியத் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள். ஆசியா என்பது இந்தியா சீனா முதல் ஜப்பான் வரை உள்ளடக்கியது. இதில் ஓசியானியாவில் ingsoc(இங்கிலிஷ் சோசியலிசம்) என்னும் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இது அப்படியே சோவியத்தில் நடைபெற்ற போல்ஷ்விக்குகள் ஆட்சியை உருவகப்படுத்துவதுபோல் இருக்கும். இந்த ingsoc கட்சியின் தாரக கோஷங்கள்,
- பெரிய அண்ணன் உங்களை பார்த்து கொண்டு இருக்கிறார்(Big Brother is watching you).
- சுதந்திரம் என்பது அடிமைத்தனம்.
- போர் என்பது சமாதானம்.
- அறியாமை பலம்.
- யார் கடந்தகாலத்தை கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே வரும் காலத்தை கட்டுப்படுத்துவார்கள், அதேபோல் யார் நிகழ்காலத்தை கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே கடந்த காலத்தை கட்டுப்படுத்துவார்கள்.
Ingsoc கட்சியின் பிரதான ஆட்சி மொழி நியூஸ்பீக் மற்றும் கட்சி 2050 ம் ஆண்டுக்குள் ஓல்டுஸ்பீக்கில் உள்ள இலக்கண வடிவம், கலாசார வடிவ சொற்கள் மற்றும் தேவையற்ற சொற்களை களைந்து கட்சியின் சித்தாந்தத்துக்கு ஏற்ப நியூஸ்ஸ்பீக்கை மாற்றுவதுதான் அதன் நோக்கம். ஏனென்றால் ஓல்டுஸ்பீக்கில் உள்ள அதிகப்படியான வார்த்தைகள் கட்சி சித்தாந்தத்தின் பொருள்களுக்கு பல்வேறு அர்த்தங்களை தருவதால் அது இரட்டை சிந்தனைக்கு வழிவகுக்கிறது. கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராகவோ அல்லது இரட்டை சிந்தனை செய்வதோ கடுமையான குற்றமாகும். கட்சி புரட்சியின் மூலம் அடைந்த தனது அதிரகாரத்தை தக்க வைக்கவும் மற்றும் யாரும் கட்சிக்கு எதிராக புரட்சி செய்யாமல் இருக்கவும் மக்களை அனைதுவிதத்திலும் உளவு பார்க்கிறது. ஆங்காங்கே telescreen என்னும் தொலைத்திரை மற்றும் microphone பொருத்தப்பட்டிருந்தது. மக்களிடேயே உலாவும் சிந்தனை போலீஸ் என்னும் ஒற்றர்கள் மற்றும் சிறு குழந்தைகளையும் பெற்றோர்களுக்கு எதிராக ஒற்றர்களா மாற்றியிருந்தது கட்சி. குடும்பங்களை சிதைக்க கட்சி குழந்தைகளை பெற்றோர்களுக்கு எதிராக திருப்பியது.
கட்சியின் அடிப்படை கோட்பாடு, கடந்த காலத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நிகழ் காலத்தை கட்டுப்படுத்தலாம் என்பதாகும். இந்த கடந்த காலத்தை திரிக்கும் வேலையை செய்யும் நபராக வருகிறார் இந்நாவலின் கதாநாயகன் வின்ஸ்டன் ஸ்மித். வின்ஸ்டன் 39 வயதுடைய, ministry of true அமைச்சகத்தில் எடிட்டராக வேலை செய்பவர். அதே அமைச்சகத்தில் அச்சு எந்திரத்தை சரி செய்யும் மெக்கானிக்காக 26 வயதுள்ள ஜூலியா வருகிறாள். இந்த ministry of true அமைச்சகம் நியூஸ்பீக்கை புதுப்பித்தல், இம்மானுவேல் கோல்ட்ஸ்டீன் பற்றிய வெறுப்பு நிகழ்ச்சிகள் நிகழ்த்துதல் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கடந்த கால தரவுகளை மாற்றுதல், உளவு பார்த்தால் மற்றும் கட்சி கூட்டங்களை ஒருங்கிணைப்பது போன்றவற்றை பிரதானமாக மேற்கொள்ளும். இந்த கோல்ட்ஸ்டீன்தான் ஓசியானியா மற்றும் பெரிய அண்ணனின் ஒரே எதிரி. நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் கோல்ட்ஸ்டீன்னும் மற்றும் அவரது இயக்கமும்தான் காரணம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு ஆளோ இயக்கமோ கிடையாது. மக்களிடையேயும் கட்சி உறுப்பினர்களிடையேயும் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதுதான் அதன் நோக்கம்.
வின்ஸ்டன்னுக்கு அமைச்சகத்தில் வேலை தெடங்கியதும் அவனுது பணியிடத்தில் அன்றைய மாற்றப்பட வேண்டிய செய்திகள் வரும். அதை கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மாற்றவேண்டும். உதாரணத்துக்கு ஓசியானியா யூரேசியாவுடன் போர் புரிந்து கொண்டு இருந்தால் அதன் கடந்தகால நிகழ்வுகளை எல்லாம் அதெற்குகேற்ப மாற்றப்பட வேண்டும். அதேபோல் பெரிய அண்ணன்(1970) அடுத்த காலாண்டில் இவ்வளவு உற்பத்தியை எட்டிவிடும் என்று கூறியிருப்பார். ஆனால் 1971 இல் அதே அளவு உற்பத்தி எட்டியிருக்காது. உடனே பழைய ஆவணங்கள் எல்லாவற்றிலும் பெரிய அண்ணன் கூறிய தரவு அல்லது உற்பத்தி தரவை மாற்றப்பட வேண்டும். இந்த தரவுகள் மாற்றப்பட்டு அரசு ஆவணங்களில் சேர்க்கப்படும் மற்றும் பழைய ஆவணங்கள் எரிக்கப்படும். இது எதற்க்கு என்றால் கட்சி கூறியது எப்போதுமே சரியாக இருந்துருகிறது. எதிர்காலத்திலும் அது அப்படியே நடைபெறும் என்று மக்களிடையே விதைப்பதற்கு.
வின்ஸ்டனின் வேலைகள் அவனுள் ஒருவித எதிர்ப்பு மனநிலையை உருவாக்கியது. உண்மையில் புரட்சிக்கு முன்பான காலகட்டம் மிகவும் கொடியதாகா இருந்ததா? புரட்சிக்கு முன்பு இருந்த காலகட்டத்தில் உண்மையில் முதலாளிகள் தொழிலார்களை கொடுமை படுத்தினார்களா? மக்களின் வாழ்க்கைத்தரம் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட மாறியுள்ளதா ? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதை ஒப்பிட்டு பார்க்க தரவுகள் ஏதும் அவனிடம் இல்லை. இந்த கட்சிக்கு எதிரான இரட்டை சிந்தனை நிலைப்பாடு என்பது குற்றமாகும். அதேபோல் வின்ஸ்டன் கோல்ட்ஸ்டீன் என்னும் சமத்துவ இயக்கம் இருப்பதாகவும் நம்பினான். உண்மையில் மக்கள் மற்றும் தொழிலார்களின் நிலைமை புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட மோசமாக இருந்தது. அவன் மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் விவாதிக்க முடியாது. ஏன்னென்றால் ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அதேபோல் வின்ஸ்டன் தனிமையாக வீட்டில் இருக்கும்போது, அவன் சிந்தனைகளால் முகபாவனைகளில் மாற்றம் ஏதும் ஏற்பட்டால் அது தொலைத்திரையால் உள்வாங்கப்படும். அதேபோல் தூக்கத்தில் கட்சிக்கு எதிராக எதாவுது முனங்கினாள் கூட அது தொலைத்திரையில் உள்ள microphone பதிவு செய்யப்படும். அதனால் வின்ஸ்டன் முகபாவனைகளில் பெரிதும் மாற்றம் இல்லாமல் கட்டுப்படுத்தி கொண்டான்.
ஒருநாள் வின்ஸ்டன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வேலையில் எதோ ஒரு சிந்தனையில் கால்போன போக்கில் நடந்தான். அங்கு சாராத சாதாரண குடிமக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்து கொண்டே சென்றான். வயது முதிர்ந்த ஒரு பெரியவரிடம் புரட்சிக்கு முற்பட்ட காலகட்ட நிலையை விசாரித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த எந்த விஷயமும் பெறமுடியவில்லை. சிறிது நேரத்திற்கு பின் தான் வசிக்கும் இடத்தில் வெகுதூரம் வந்துவிட்டோம் என்று எண்ணி திரும்பினான். கட்சி சீருடையில் யாரோ எதிரில் வருவதுபோல் இருட்டில் தெரிந்தது. கடைசியில் ஜூலியா வின்ஸடன்னை பார்த்துவிட்டால். கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பை தாண்டி வெளிப்பகுதிகளில் சுற்றுவது குற்றமாகும். அவன் பயந்து நடுங்கி, அவள் உண்மையில் நம்மை உளவு பார்க்கத்தான் பின்தொடர்ந்திருப்பாளோ. சிந்தனை போலீஸிடம் போட்டுக்கொடுத்துவிடுவாளோ என்று எண்ணிக்கொண்டே சென்றான்.
மறுநாள் அலுவலகத்தில் தன்னை நோக்கி ஒரு கையில் கட்டுடன் வந்த ஜூலியா கீழே விழுந்தால். அவளை தூக்கிவிடும்போது அவள் அவன் கையில் ஒரு காகிதத்தை விட்டு சென்றால். அதை தனது பணியறையில் எடுத்து வாசித்தான். அதில் தான் காதலிப்பதாக இருந்தது. அதன்பின், வின்ஸ்டன் ஜூலியாவும் யாருக்கும் தெரியாமல் சந்திக்க ஆரம்பித்தார்கள்.
வின்ஸ்டன் தங்களின் சந்திப்புக்கு ஒரு நிரந்திர இடம் தேவை என்று சாரிங்டன் என்பவரின் கடையின் மேல்பகுதியில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்தான். இந்த சாரிங்டன் என்பவர் பழைய பொருள்களை விற்கும் முதியவர். வேலை முடிந்தபின்பு ஜூலியாவும் வின்ஸடன்னும் சிலமணி நேரம் இங்கு கழித்துவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்புவர். கட்சி உறுப்பினர்களிடேயே பாலியல் உறவு வைத்துக்கொள்ளுதல் என்பது கட்சிக்கு எதிரானது. அதேபோல் கட்சி உறுப்பினர்கள் திருமணம் செய்துகொள்ள கட்சியிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். அதேபோன்று கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நன்மைக்காக வாரிசு வேண்டி உறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதைத்தவிர அனைத்துவித பாலியல் உணர்ச்சிகளும் குற்றமே.
வின்ஸ்டனுக்கு நெடுநாட்களாக ஓப்ரையன் சந்திக்கவேண்டும் என்ற உள்ளெண்ணம் இருந்தது. ஏனென்றால் தான் இருப்பதாக நினைக்கும் கோல்ட்ஸ்டீன் இயக்கம் பற்றி அவருக்கு தெரியும் என்று எண்ணினான். இந்த ஓப்ரையன் என்பவர் கட்சி உறுப்பினர் மற்றும் அமைச்சர். ஒரு நாள் வின்ஸ்டன் அமைச்சகத்தின் காரிடாரில் நடந்து கொண்டிருக்கும் போது ஓப்ரையன் பின்தொடர்ந்தார் மற்றும் வின்ஸ்டன் யாரோ தொடர்வதுபோல் உள்ளது என்ற திரும்பியவுடன் ஓப்ரையன் பேச தொடங்கினார். தாம் டைம்ஸ் நாளிதழில் வின்ஸ்டன் எழுதிய கட்டுரைகளை வாசித்ததாகவும், அதில் இரண்டு காலங்கடந்த வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. நீ நியூஸ்ஸ்பீக் பத்தாவது பாதிப்பை பார்த்திருக்கிறியா ? என்று ஓப்ரையன் வினாவ, இல்லை என்று வின்ஸ்டன் கூறினான். பத்தாவுது நியூஸ்ஸ்பீக்கின் சில முன்பதிப்புகள் தன்னிடம் உள்ளதாகவும். அதை தனது பிளாட்டில் வந்து வாங்கி கொள்ளவும் என்று முகவரியை ஓப்ரையன் கொடுத்தார்.
வின்ஸ்டன் வேலை முடிந்து ஜூலியாவுடன் ஓப்ரையன் பிளாட்டுக்கு சென்றான். ஓப்ரையன் தனது பிளாட்டில் உள்ள தொலைத்திரையை அணைத்துவிட்டு பேச ஆரம்பித்தார். அவர் கோல்ட்ஸ்டீனின் சகோதரத்துவத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி மற்றும் தாம் அந்த இயக்கத்தில் இருப்பதாகவும் என்று காட்டிக்கொண்டார். வின்ஸ்டனும் அவருடன் இணைந்து செயல்பட விரும்பினான். ஓப்ரையன் கோல்ட்ஸ்டீன் எழுதிய புரட்சி பற்றிய புத்தகங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மற்றும் அதை தான் மறைமுகமாக குடுத்து அனுப்புவதாகவும் வின்ஸ்டனிடம் கூறினார்.
சில நாட்களில் கோல்ட்ஸ்டீனின் புரட்சி பற்றிய புத்தகத்தை வின்ஸ்டன் பெற்று கொண்டு. அதை தான் வாடகைக்கு எடுத்த அறையில் உட்கார்ந்து வாசித்தான். சில நிமிடங்களில் ஜூலியாவும் அங்கு வந்து சேர்ந்தால். வின்ஸ்டன் அவளுக்கு அந்த நூலை வாசித்து காண்பிக்க ஆரம்பித்தான். சில நிமிடங்கள் கழித்து தொலைத்திரையில் இருந்து சத்தம் கேட்டது, அவர்கள் இருவரும் உறைந்துவிட்டனர். இருவரும் திரும்பியபோது சாரிங்டன் உள்நுழைத்தார். அப்போதுதான் வின்ஸ்டனுக்கு புரிந்தது தான் வாடகைக்கு அறை எடுத்த உரிமையாளர் சாரிங்டன் சிந்தனை போலீஸ் என்றும் மற்றும் அந்த அறை முழுவதும் தொலைத்திரையால் உளவு பார்க்கப்பட்டது என்றும். வின்ஸடனும் ஜூலியாவும் கைது செய்யப்பட்டனர்.
வின்ஸ்டன் முன்பே நினைத்ததுபோல் அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு அழித்தொழிக்கப்படுவார்கள். அவனுக்குள் அந்த எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது மற்றும் அமைச்சகத்தின் சிறையறையில் வரும் மற்ற கைதிகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது பார்சன்ஸ் சிறையினுள் வந்தார். தாம் என்ன குற்றம் செய்து உள்ளே வந்திர்கள் என்று கேட்க. நான்(பார்சன்ஸ்) தூக்கத்தில் பெரிய அண்ணன் ஒழிக என்று கூறினேன். அதை கேட்டு எனது சிறிய மகள் போலீசிடம் போட்டுகொடுத்திவிட்டால் என்றார். இந்த பார்சன்ஸ் என்பவர் வின்ஸ்டன் பிளாட்டில் வசிக்கும் அண்டைவீட்டார்.
சிறிது நேரம் கழித்து ஓப்ரையன் தான் இருந்த சிறையில் உள்நுழைத்தார். வின்ஸ்டன் அதிர்ச்சியுடன் உங்களையும் பிடித்துவிட்டார்களா என்று கேட்டான். கடைசியில்தான் வின்ஸ்டனுக்கு புரிந்தது தன்னை சிக்க வைக்கத்தான் ஓப்ரையன் நாடகம் ஆடினார் என்றும் மற்றும் தாம் பலவருடங்களாக உளவு பார்த்து வந்திருக்கிறோம் என்றும். வின்ஸடனும் ஜூலியாவும் சித்திரவதை செய்யப்பட்டு ஒருவரை ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். கட்சிக்கு எதிரான மனநிலை அறவே அவர்கள் மனதில் இருந்து அகற்றப்பட்டது. விடுதலையும் செய்யப்பட்டனர்.
விடுதலைக்கு பின்பு சில நாட்கள் கழித்து வின்ஸடனும் ஜூலியாவும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர். இருவரின் உருவமும் பெருமளவு மாறியிருந்தது. இப்போது அவர்களிடம் காதல் இருந்தது தவிர பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை. சிறிது நேரம் பேசிவிட்டு பிரிந்து சென்றனர். வின்ஸ்டன் நினைத்தது போல அரசியல் கைதியான தான் ஒரு நாள் போலீஸ் ஒருவனால் பின்னிருந்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த நாவலில் வரும் அனைத்து உளவு பார்க்கும் விஷயங்களும் நிகழ்காலத்திற்கும் பொருந்துகின்றன. என்ன ஒரு வித்தியாசம் என்றால் telescreen க்கு பதில் smart phone. நாம் இன்று பார்க்கும் big boss என்ற நிகழ்ச்சி கூட இந்த கதையின் inspiration இருக்கலாம்.
Comments
Post a Comment