Feminism

சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள் தங்களுக்கான சம உரிமையை கோருவதே feminism ஆகும். மேற்க்கத்திய நாடுகளில் 1550 முதல் பெண்ணிய இலக்கியங்கள் சமுக தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், feminism என்ற வார்த்தை 1837 இல் Charles Fourier(utopian ideologist) என்னும் பிரெஞ்சு எழுத்தாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த ஒரு குழுவோ, இனமோ இல்லை சாதியோ சமூக அங்கீகாரத்தை பெற முயலும் போது தனக்கான வரலாற்று உணர்வை உருவாக்க முனையும். அதைப்போலத்தான் பெண்ணியமும் 16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனக்கான அங்கீகாரகத்தை பெற தனது கருத்துக்களையும் இலக்கியங்களையும் சமூக தளத்தில் விவாதிக்க தொடங்கியது. இதன் தொடர்விளைவே 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பெண்ணிய போராட்டங்கள். 

இச்சமூகத்தில் ஆண் வலிமையானவனாக கருதப்பட்டதால் அவன் வேலைக்கு செல்லுதல் என்று பொருளாதாரம் சார்ந்து இயங்கினான். பெண்கள் குடும்ப வேலைகள், இன உற்பத்தி மற்றும் குழந்தைகளை பராமரித்தல் என்று குடும்பம் சார்ந்து இயங்கினாள்!. இது நிலவுடமை சமூகம் வரைக்கும் இதே முறையில்தான் இயங்கியது. ஏனென்றால் நிலவுடமை சமூகம் வரைக்கும் வேலை என்பது கடின உடல் உழைப்பை சார்ந்தே இருந்தது. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்கு(1789-1799) அடுத்து இதில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாக தொழிற்சாலைகள் உருவாக தொடங்கின மற்றும் வேலை என்பது skilled Labour மற்றும் அறிவு சார்ந்து என்று மாறியது. இந்த தொழிற்புரட்சியின் மாற்றங்கள் ஆண் வலிமையானவன் மற்றும் பெண் வலிமையற்றவள் என்ற கண்ணோட்டத்தை உடைக்க ஆரம்பித்தது. பெண்கள் தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய  தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல தொடங்கினார்கள். அதை ஒட்டியே பெண்ணிய புரட்சிகளும் வலுப்பெற ஆரம்பித்தது. எங்கெல்லாம் சமூகம் நிலவுடைமையில் (feudalism) இருந்து தனிச்சொத்துவுடமைக்கும் (capitalism) நோக்கி நகருகிறதோ, அங்கெல்லாம் பெண்ணியத்திற்கான போராட்டங்களையும் உரிமைகளையும் கோரியே அது நகருகிறது.

பொதுவாகவே சமூகங்கள் ஆண் ஆதிக்கம் நிறைந்த தந்தை வழி சமூகமாகவே இருந்து வந்துருக்கிறது. அது பெண்களுக்கான உரிமைகளை மறுக்கிறது மற்றும் தனது கலை, இலக்கியங்கள், கலாச்சாரங்களின் வழியாக பெண்களுக்கு "பெண்மை(feminine)" என்னும் செயற்கையான கட்டமைப்பை உருவாக்குகிறது. அரசியலில்  பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை என்பது மறுக்கப்பட்டது, ஊதியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. பாலின அடிப்படையில், கல்வி மறுக்கப்பட்டது மற்றும் மேற்கத்திய நாடுகளில் உயர் கல்விகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன பாலின அடிப்படையில், தான் பெற்ற குழந்தைகள் மீது ஒரு பெண்ணுக்கு உரிமை கிடையாது, மணமான பெண்களுக்கு தங்கள் கணவரிடம் இருந்து சட்டரீதியான சுதந்திரம் இல்லை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை பெறுவதும் கடினமாக இருந்தது. அதேபோல் பாலியல் குற்றங்களுக்கு சட்டங்கள் ஏற்றத்தாழ்வுடனே பெண்களை அணுகியது. ஒரு பெண் திருமணம் செய்து சமூகம் கட்டமைத்த பெண்மை என்னும் பண்புகளை ஒழுகுவதையே ஒழுக்கமானவள் என்று வரையறுத்தது. 

பெண்கள் தங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடிய அனைவருமே பெண்ணியவாதிகள் என்று வரையறுக்கப்படுகிறது. அதேபோல் பெண்களை இச்சமூகம் பெண்மை (feminine), பெண்பால் (female), பெண்ணிய (feminist) என்று  மூன்றுவிதமாக பார்க்கிறது. இதில் பெண்மை (feminine) என்பது செயற்கையாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது  (உதாரணத்துக்கு பெண்மை என்று கருதப்படும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு போன்ற பண்புகள்). பெண்பால்(female) என்பது ஓர் உயிரினத்தின் இயற்கை பாலின வரையறை மற்றும் இப்பெண்பாலில் பெண்மைக்கான குணாதிசியங்கள் இருக்க தேவையில்லை, ஏன்னென்றால் அவை செயற்கையாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக சம உரிமை கோருதல் அல்லாத male supremacy இணையாக தங்களை உயர்த்துவதே பெண்ணியம் (feminist) என்று வரையறுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்ணியம் என்பது ஒரே மாதிரியான போராட்டமாக நிகழவில்லை. தங்களின் சமூக சூழல் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து வெவ்வேறு வகையான பெண்ணிய போராட்டங்களாக நடைபெற்றது. இவ்வாறு பெண்ணியம் என்பது அதன் தன்மைக்கு ஏற்ப தனது கோட்பாடுகளை வரையறுத்தது. அவை,
  • Liberal Feminism(Mainstream Feminism)
  • Radical Feminism
  • Cultural Feminism
  • Global Feminism
  • Marxist Feminism
  • Socialist Feminism
  • Eco Feminism
  • Neo-Liberal Feminism
  • Individualist Feminism
  • Post Structuralist Feminism
  • Post Modern Feminism
  • Anarchist Feminism
  • Black Feminism
இதில் liberal feminism என்பது சமூகத்தில் இருக்கும் பாலின சமத்துவமின்மையை எதிர்ப்பது மற்றும் சம உரிமை கோருவதாகும். அதே radical feminism என்பது சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளும் மூலகாரணமாக ஆண் ஆதிக்கத்தை பார்ப்பதும் மற்றும் அதன் ஆண் மேலாதிக்கத்தை அகற்ற சமூகத்தை மறுசீரமைப்பதாகும். Cultural feminism என்பது சமூகத்தில் பெண்மை தன்மையை முதன்மைப்படுத்துவதாகும் ஆண்மைக்கு பதில். இதேபோன்று ஒவ்வொரு பெண்ணியமும் அதன் கொள்கைகள் அடிப்படையில் வித்தியாசப்படுகிறது. 

அதேபோல் feminism vs gender equality என்ற இரண்டுமே உரிமைகளை கோருவதாகும். ஆனால் அதில் feminsim என்பது சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமையையும், gender equality என்பது பாலின பாகுபாடு இன்றி அனைவருக்குமான உரிமையையும் கோருவதாகும். 

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒடுக்குமுறைகள் எதிர்கொண்டு சிறு சிறு போராட்டங்களாக ஆரம்பித்தனர். பின்னர் அது குழுக்களாக மாறி முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என்று பெண்ணிய எழுச்சிகளாக உருவானது.  

First Wave Feminism(1848 - 1920)

அமெரிக்காவில் 1848 இல் கூடிய செனேகா நீர்விழ்ச்சி கூட்டத்தில் 300 பேர்  கலந்து கொண்டனர். அதில் பாலின சம உரிமை மற்றும் அனைத்துவித பாலின பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டது. இதுவே பெண்ணிய முதல் அலையாக பார்க்கப்படுகிறது. 

முதல் அலை பெண்ணியமானது சம உரிமை கோரி தொடங்கியது. முதல் அலை கால கட்டத்தில் வாக்களிக்கும் உரிமை, கல்வி மற்றும் திருமணம் ஆனா பெண்கள் தங்களுக்கான property மற்றும் சொத்துக்களை தாங்களே வைத்து கொள்ளும் உரிமை போன்றவை தீவிர விவாத பொருளாக இருந்தது. 

முதல் அலையின் விளைவாக பெண்களுக்கான வாக்கும் அளிக்கும் உரிமை படிப்படியாக எல்லா நாடுகளிலும் வழங்கப்பட்டது. தேசிய அளவு தேர்தலில்  பெண்களுக்கான முழு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்ட முக்கிய நாடுகள் அதன் ஆண்டு வாரியாக (New Zealand - 1893, Finland - 1906, Denmark - 1915, Iceland - 1915, Russia - 1917, Germany - 1918, United Kingdom - 1918, United States - 1920, Brazil - 1932, Turkey - 1934, France - 1944, Japan - 1945, India - 1947, Greece - 1952, China - 1953, Mexico - 1953, Switzerland - 1971, Iraq - 1980, Oman - 1994, Saudi Arabia - 2015).

பெண்களின் சொத்துக்கள் திருமணத்திற்கு பிறகு அவரது கணவருக்கே சொத்துக்களை கையாளும் முழுஉரிமை இருந்தது. இது இங்கிலாந்தில் 1882 இல் "Married women act" சட்டத்தின் மூலம் பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் சொத்துக்களை தாங்களே வைத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவிலும் பெண்கள் தங்கள் சொத்துக்களை திருமணத்திற்கு பிறகு தாங்களே வைத்து கொள்ளும் உரிமை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படிப்படியாக வழங்கப்பட்டது.

Second Wave Feminism(1963 - 1980)

முதலாம் அலையால் பெண்களுக்கு அரசியல், சமூகம், வேலை, கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் வாய்ப்புகளை கொடுத்தாலும் சம வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இரண்டாம் அலை பெண்ணியம் சம ஊதியம், சமகல்வி வாய்ப்பு, பாலின பாகுபாடு இல்லாமல் நடத்துதல், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து தொடங்கியது. முதல் அலை பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமையை கோரியது ஆனால் இரண்டாம் அலை பெண்ணியம் பெண்களுக்கான விடுதலையை கோரியது, அதேநேரத்தில் சமூகத்தில் நிலவிய ஆணாதிக்கத்தை எதிர்த்து. 

இரண்டாம் அலை பெண்ணியம் Liberal feminism மற்றும் Radical feminism என்ற இரு வகைகளில் நடந்தது.

Betty Frieden 1966 இல் National Organisation for Women(NOW) என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் அமெரிக்காவில் அலுவலகம், organisation மற்றும் தொழிற்சாலைகளில் காணப்படும் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை களைய முயன்றார்.

பெண்கள் விடுதலை இயக்கம்(Women liberation moment) 1968 இல் அமெரிக்காவில் நடந்த அழகி போட்டியை எதிர்த்து பேரணி நடத்தினர். அதன் நோக்கம் போட்டியில் பெண்களை பந்தய பொருள்போல் இச்சமூகம் பார்க்கிறது என்று எதிர்த்தது. ஆர்ப்பாட்ட பெண்கள் தங்களின் boardwalk, including bras, hairspray, makeup, girdles, corsets, false eyelashes, mops மற்றும் இதர அழகு சாதனங்களையும் தூக்கி வீசினார்.

அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் பெண்ணியவாதிகளும் 1970 இல் நடந்த உலக அழகி போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

1970 இல் National Women’s Liberation Movement ஆக்ஸ்போர்டு, ரஸ்கின் கல்லுரியில் நடந்தது.

1968 இல் MLF என்னும் Mouvement de Libération des Femmes பெண்கள் விடுதலை இயக்கம் பிரான்சில் உருவானது.

Third Wave Feminism(Post Feminism - 1980 to present)

1980 களில் Post feminism என்பது ஊடகங்கள் மூலம் எழுந்தது. இந்த பெண்ணிய அலைக்கு தெளிவான வரையறை எதுவும் இல்லை. Social Media மூலம் உருவான MeToo movement கூட Post feminism என்ற வகையில் பார்க்கப்படுகிறது. 

பெண்ணிய எழுச்சிக்கு காரணமாக அமைந்த சில புகழ் பெற்ற பெண்ணிய எழுத்தாளர்கள்(Mary Astell (1666–1731), Mary Wollstonecraft (1759–99), Harriet Taylor (1807–58), John Stuart Mill (1806–73), Elizabeth Cady Stanton (1815–1902), Virginia Woolf (1882–1941), Simone de Beauvoir(1908-1986), Betty Friedan(1921-2006), Kate Millett(1934-2017), Germaine Greer(1939), Marry Ellmann(1921-1989), Annette kolodny(1941-2019), Myra jehlen(1940), Helen cixous(1937), Luce Irigaray(1930), Julia christeva(1941), Susan Brownmiller(1935)).

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்