ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் | RSS

நமது பாரத தேசம் மொழி, மாநிலம், இனம், ஜாதி, உட்பிரிவு, சமயம் என்று பல வேற்றுமைகளால் வேறுபட்டு கிடக்கிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இந்த சமூகத்தை ஹிந்து(ஹிந்து தேசியம் அல்லது ஹிந்து பண்பாடு) என்ற ஒற்றை அடையாளத்தில் ஒருங்கிணைப்பதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.

ஆரிய சமாஜத்தின் கனவுகளையும் காந்தியின் செயல்முறைகளையும் உள்ளடக்கி இந்துமத ஞானமரபினை பாதுகாக்க சங்கமானது 1925 ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் தொடங்கப்பட்டது. 

சங்கமானது சமூகத்தில் நிலவும் தீண்டாமை, ஜாதி மற்றும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்க்கிறது. காலம் கடந்த மனு ஸ்மிருதியை சங்கமானது நிராகரிக்கிறது. ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைய சமபந்தி போஜனம் மற்றும் கலப்பு திருமணங்களை ஆதரிக்கிறது. அதேபோல் இம்மண்ணில் தோன்றிய சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய போன்ற சமய வேற்பாடுகளை களைந்து ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்தில் சமூகத்தை ஒன்றுணைக்கிறது. உருவ மற்றும் அருவ வழிபாட்டு முறைகளை ஏற்கிறது. சங்கமானது ராமனையோ அல்லது சிவனையே வணங்கினால் தான் ஹிந்து என்று வரையறுப்பதில்லை. அது நடுகல் வழிபாடோ, நாட்டார் வழிபாடோ, இயற்கை வழிபாடோ, ஜோதி வழிபாடோ இல்லை வேள்வித்தீ வழிபாடோ இம்மண்ணில் தோன்றிய அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஏற்கிறது. 

சங்கமானது சர்சங்கசாலக் என்னும் தலைவர், பிரசாரக், பிராந்தியக் கிளைத் தலைமை, காரியகர்தாக்கள் என்ற படிநிலையில் இயங்குகிறது. தலைவர் என்னும் சர்சங்கசாலக் தேச சேவைக்காகத் தன் சொந்த வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். படித்தவர். சிந்தனையாளர். தவிரவும் களப்பணி ஆற்றுவதில் வல்லவர். தலைவர் என்பவர் குரு. இங்கே அவர் ராஜ ரிஷி. இந்தியா மரபுப்படி ராஜ ரிஷியை தேர்தல் வைத்து தேர்ந்து எடுக்க முடியாது. எனவே ஒரு சர்சங்கசாலக் அவரது  முந்தைய சர்சங்கசாலக்கினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சர்சங்கசாலக்குக்கு அடுத்த நிலையில் வருபவர் பிரசாரக். பிரச்சாரக் என்பவர் சங்கத்தின் முழு நேர ஊழியர் மற்றும் பிராந்தியத் தலைமையகத்துக்கும் மத்தியக் குழுவுக்கும் இடையே ஒரு பெரும் பாலமாகச் செயல்படுவது இவர்கள்தாம். பிரச்சாரக்குகளின் முக்கிய பணிகள் தேசமெங்கும் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களின் செயல்பாடுகளை கவனிப்பது. எங்கும் தேக்கம் வராமல் அது சீராக இயங்க வழி செய்வது. புதிய ஷாகாக்களைத் திறக்க முயற்சி செய்வது. அதன்பொருட்டுப் பல்வேறு பிராந்தியங்களில் மக்களிடம் சென்று பேசி, ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளை விளக்குவது, புரியவைப்பது. பிரச்சாரக்குகளுக்கு அடுத்தநிலையில் வருவது பிராந்திய கிளை தலைமை. இதன் முக்கிய பணிகள் ஷாகாக்களை ஒருங்கிணைப்பதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஒழுங்காக நடைபெறுவதை உறுதி செய்வதுமாகும். சங்கத்தை பற்றி  பி.ஆர்.தீரஜ் என்ற பிரச்சாரக் ஒரே வரியில் எழுதியிருப்பதை இவ்விடத்தில் பார்க்கலாம். 

"The RSS begins with the shakha, and ends with the shakha. Other than the shakha, there is nothing more to the RSS."

பெங்களூர்க்காரரான தீரஜ், சோற்றுக்கு வழியற்று ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தவரல்லர். இயந்திரவியல் பொறியாளர் பட்டம் பெற்று, டெல்லி ஐ.ஐ.டியில் எம் டெக் முடித்து, புனாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். தீரஜ், ஷாகாவுக்குப் போகத் தொடங்கி மெல்ல மெல்ல ஆர்.எஸ்.எஸ்ஸால் ஈர்க்கப்பட்டு 2007ல் அதில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவர்.

சங்கம் உயிர்ப்புடன் இருப்பதற்கும் மற்றும் அடித்தட்டு மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது ஷாகா தான். சங்கமானது சமுதாய ஒருங்கிணைப்புக்கு ஷாகா(தினசரி கூடுதல். இதன் மூலம் சமூகத்தில் உள்ளவர்களிடம் பரஸ்பரமாக பேசி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும்), வர்க(முகாம் - வேற்றுமைகளை களைந்து சகோதரத்துவுடன் இருப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகிறது), வீட்டு தொடர்பு(கார்யகர்தாக்கள் ஒருவருடன் மற்றோருவர் வீட்டுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளவேண்டும். இது சமூகத்தில் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும்), ரக்ஷாபந்தன்கபடிதிருவிழாக்கள்(ஹிந்துக்களை ஒன்றிணைக்க விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களை சங்கம் முன்னெடுக்கிறது) போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 

சங்கத்தின் நிலைப்பாடு, சமூகசீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பார்ப்போம்,

சங்க பள்ளிகள்

பிற்படுத்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் கல்வி அறிவு பெற சங்கமானது சரஸ்வதி சிசு மந்திர் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு இந்த சிசு மந்திர்கள் அனைத்தும் ‘வித்யா பாரதி’ என்னும் பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளாக்கப்பட்டன. தேசமெங்கும் சுமார் இருபதாயிரம் பள்ளிகள். ஒரு லட்சம் ஆசிரியர்கள். இருபத்தி ஐந்து லட்சம் மாணவர்கள் என்று இயங்கி வருகிறது.

தீண்டாமை

சங்கத்தில் தீண்டாமையோ சாதிய ஏற்ற தாழ்வுகளோ அறவே கிடையாது.

டிசம்பர் 22, 1934 ம் ஆண்டு வர்தாவில் சங்க முகாம் துவங்கியது மற்றும் டிசம்பர் 25 ல் காந்தியடிகள் முகாமை பார்வையிட்டார். அம்முகாமில் 1500 ஸ்வயம் சேவகர்கள் பங்குபெற்றனர். மராட்டா, தலித் பிரிவை சேர்ந்த மஹார், பிராமணர் எல்லா ஜாதியை சேர்ந்த ஸ்வயம் சேவகர்கள் ஒரே இடத்தில் தங்கி மற்றும் ஒரே வரிசையில் அமர்ந்து உணவு உண்கிறார்கள் என்பதை அறிந்து காந்திஜி வியந்தார். இது குறித்து ஆராய சில ஸ்வயம் சேவகர்களை அழைத்து கேள்வி கேட்டார். காந்தியடிகளின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்வயம் சேவகர்கள், "நாங்கள் மராட்டா, மஹார், பிராமணர் என்று ஜாதி வேறுபாடு காண்பதில்லை. எங்கள் அருகில் உள்ள ஸ்வயம் சேவகர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்று எங்களுக்கு தெரியாது. நாம் அனைவரும் ஹிந்துக்கள்". சங்கத்தில் உறுப்பினர்களிடம் தீண்டாமை இன்றி சகதோர உணர்வுடன் இருப்பதை கண்டு வியந்த காந்திஜி தனது மகிழ்ச்சியை டாக்டர் ஹெட்கேவரிடம் வெளிப்படுத்தினார்.

1939 ல் புனேவில் நடைபெற்ற சங்க முகாமை பார்வையிட்ட அம்பேத்கர். இங்கு ஸ்வயம் சேவகர்கள் மற்றவர்களது ஜாதி பற்றி கேட்காமல் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற ரீதியில் இருப்பது கண்டு வியக்கிறேன் என்று கூறினார்.

தீண்டாமை சாஸ்திரத்தில் இடமில்லை என்பதை அறிவிக்க அண்ணல் அம்பேத்கரின் கனவை நனவாக்க 13-12-1969 ல் எல்லா சம்பிரதாய மடாதிபதிகளையும் அழைத்து கர்நாடக உடுப்பியில் ஒரு மாநாட்டை கூட்டியது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. அதில் சைவம், சமணம், சீக்கியம், வீரசைவம், மத்வம், வைஷ்ணவம் போன்ற எல்லா பிரிவு மடாதிபதிகளும் கலந்து கொண்டனர். அதில் ஆன்மிக பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் "ஹிந்து சாஸ்திரத்தில் எந்த ஒரு இடத்திலும் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை" என்று தீர்மானம் நிறைவேற்றினர். அதனால் பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. 

பட்டியல் சமூகத்தவர்கள் 

1989 ல் காமேஸ்வர் சௌபால் என்கிற பட்டியல் சமூகத்தவர்தான் முதல் செங்கலை எடுத்து வைத்து அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

பட்டியல் சமூக மக்கள் சமூக சமுத்துவதை பெற அதிக அளவு அரசியல் அதிகாரத்தை அளிப்பது சங்கத்தின் பரிவார் அமைப்பான பாரதிய ஜனதா கட்சியே. 2014 நாடாளுமன்ற sc தனித்தொகுதியில் 80 ல் 40ல் வெற்றி பெற்றது(overall bjp won 67/131 - 40/84sc+27/47st). 2019 தேர்தலில் 84 sc தனித்தொகுதிகளில் 46 ல் வெற்றிபெற்றது(overall bjp won 77/131 - 46/84sc+31/47st). பட்டியில் சமூகத்தின் பெருவாரியான ஆதரவுடன் சங்க பரிவார் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது.

அதிக அளவு பட்டியல் சமூக மக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பரிவார் அரசே. 2019 ஆட்சியில் 20(12sc+8st) பேர் அமைச்சர்களாக அமர்ந்திருக்கின்றனர். அதில் 4 பதவிகள் கேபினட் அந்தஸ்து உடையது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த திரு ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அழகு பார்ப்பதும் சங்கமே.

பட்டியல் சமூகத்தவரான திரு பங்காரு லக்ஷ்மணன் கட்சியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்(2000-2001).

மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் (அருந்ததியினர்) சமூகத்தை சேர்ந்த திரு முருகனை தமிழ் நாடு மாநில தலைவர் ஆக்கியதும் சங்கத்தின் பரிவார் அமைப்பே.

பழங்குடியினர்

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் மற்றும் சேவாபாரதி போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, சுய தொழில் கற்று கொடுத்தால் மற்றும் பெண்கள் சுய முன்னேற்றம் என்று உதவி வருகிறது.

நாட்டில் உள்ள 175 வனவாசி மாவட்டங்களில் 91 மாவட்டங்களில் வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 50000 வனவாசி கிராமங்களில் 6500 கல்யாண் ஆஸ்ரமத்தின்  கிளைகள் உள்ளன. கல்யாண் ஆஸ்ரமத்தின் 200 மையங்களில் 101 மாணவர் விடுதிகள், 118 இலவச மருத்துவ சேவை மையங்கள், 102 பள்ளிகள், 37 தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.


மனு ஸ்மிருதி

சங்கத்தின் அமைப்பான விஸ்வ ஹிந்து பரீக்ஷித் மனு ஸ்ம்ருதியை அடியோடு நிராகரிக்கிறது. பகவத் கீதையை நமது ஆதி மனு என்று ஏற்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுவதை சங்கம் எங்கும் எதிர்க்கவில்லை. சங்கம் அனைத்து சாதியினர் அர்ச்சகராக விஸ்வ ஹிந்து பரீக்ஷித், தந்திர வித்யா பீடம், சேஷத்ர சமரசண சமிதி போன்ற அமைப்புகளின் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.

வயநாடு மாவட்டம் கல்பட்டாவுக்கு அருகிலுள்ள பனமரம் பொங்குனி கோவிலில் 29 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு சங்கம் அர்ச்சகராக பயிற்சி அளித்து வருகிறது. அதில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தவர். அவர்களுக்கு வேத மற்றும் உபநயன சடங்குகள் சொல்லித்தரப்படுகிறது.

விஸ்வ ஹிந்து பரீக்ஷித் அமைப்பு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு பூசாரிகள் பயிற்சியை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் அதிகளவில் பூசாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2500 பூசாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கம்

தொழிலார் மற்றும் விவசாயிகளின் நலுனுக்காக 1955ம் ஆண்டு பாரதீய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்கம் உருவானது, அறுபதாம் ஆண்டு பாரதீய கிஸான் சங்கம் என்னும் விவசாயிகள் சங்கம் உருவானது. இந்தியாவில் உள்ள மிக பெரிய தொழிற் சங்கமும் இதுதான். 

சீனா படையெடுத்தபோது ஆர்.எஸ்.எஸ். சற்றும் தாமதிக்காமல் அரசுக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்தது. ஆதரவு என்பது அறிக்கையளவில் அல்ல. ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிற்சங்க அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம், அந்தக் கணம் வரை தான் போராடி வந்த அனைத்து விஷயங்கள் குறித்தான கோரிக்கைகளையும் அப்படியே தள்ளிப்போடுவதாக அறிவித்தது. நெருக்கடியான காலக்கட்டம். அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் பி.எம்.எஸ். இப்போது நடத்தாது. தவிரவும் உற்பத்திப் பணிப்பிரிவில் பணியாற்றும் அவர்களுடைய அனைத்து ஊழியர்களும் தற்செயல் விடுப்புக் கூட எடுக்க மாட்டார்கள். வாகனங்கள், ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், இருபத்தி நான்கு மணிநேரமும் பணிபுரியத் தயாராக இருப்பார்கள். நிர்வாகத்தின் கட்டளை எதுவாக இருந்தாலும் பதில் பேசாமல் செய்து முடிப்பார்கள். 

இது சாதாரணமான விஷயமல்ல. இடதுசாரித் தொழிற்சங்கப் பணியாளர்கள் என்ன நிலைபாடு எடுப்பது, யாரை ஆதரிப்பது என்று தம் தலைவர்களைப் போலவே அலைபாய்ந்துகொண்டிருந்த சமயம், தேசத்தில் உற்பத்தித் துறை சார்ந்து எந்தப் பெரும் சிக்கலும் எழாதிருக்க மஸ்தூர் யூனியன் மேற்கொண்ட கவனமும் முயற்சிகளும் மிக மிக முக்கியமானவை என்று இந்திய அரசே பாராட்டியது.

கலப்பு திருமணம்

தலைவர் ஹெட்கேவார் கலப்பு திருமணங்களை ஊக்குவித்தார் மற்றும் இளம் பெண்கள் வயதானவர்களுக்கு மணமுடிப்பதை எதிர்த்தார். அதிக அளவில் சங்க உறுப்பினர்கள் கலப்பு திருமணம் செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் நடந்த(1942) முதல் கலப்பு திருமணத்திற்கு குருஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரும் ஆர்எஸ்எஸ்ஸும்

இந்தியாவில் ஏதாவுது ஒரு இயக்கம் இமயம் முதல் கன்னியாகுமரி வரை அண்ணல் அம்பேத்கர் பெயரை தினம் தினம் உச்சரித்து போற்றி வருகிறது என்றால் அது ஆர்எஸ்எஸ் மட்டுமே. தினமும் அதிகாலையில் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் சொல்லப்படும் ஏகாத்மதா ஸ்தோத்திரம் என்ற பாடல் படுவார்கள். அதில்,

"சபாஷ ப்ரணவானந்த க்ராந்தி வீரோ விநாயக
டக்கரோ பீமராவஸ்ச ஃபுலே நாராயண குரு"

என்று அண்ணலின் பெயர் இந்தியா நாட்டுக்கும் ஹிந்து சமுதாயத்துக்கும் உழைத்த மகான்களின் ஒருவராக வரும்.

அண்ணலின் சிந்தனைகளும் சங்கத்தின் நோக்கமும் ஒன்றே அது ஹிந்து சமூகத்தை சீர்திருத்துவதே. 

1921-22ம் ஆண்டுகளில் அண்ணல் லண்டனில் வசித்த இல்லம் ஏலத்துக்கு வந்தது. அதை சங்க பரிவார் அமைப்பு பிஜேபி அரசே 40கோடி கொடுத்து வாங்கி நினைவு இல்லமாக மாற்றியது(2015).

மும்பை இந்துமில்லில் அம்பேத்கருக்கு 12 ஏக்கரில் 425 கோடியில் மாபெரும் நினைவு மண்டபத்தை கட்டுகிறது பரிவரின் பிஜேபி அமைப்பு.

ஆர்எஸ்எஸ் பிராமண இயக்கமா?

ஆர்எஸ்எஸ் தலைவராக சித்பவன் பிராமணர்களே வரமுடியும் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் 1994 முதல் 2000 வரை பிராமணரல்லாத ராஜேந்திர சிங் தலைவராக இருந்துள்ளார். சங்கபரிவாரின் பல்வேறு அமைப்புகளில் பிராமணரல்லாதோர் தலைவராக இருந்து வருகின்றனர்.

சங்கப் பரிவார்

சங்கமானது தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், இழந்த நமது கலாசார சிறப்பம்சங்களை மீட்டுஎடுக்கவும் பல அமைப்புகளை நடத்திவருகின்றன. அவற்றில் சில முக்கியமான சங்கப் பரிவார் அமைப்புகள்,
  • ராஷ்டிரிய சேவிகா சமிதி
  • சிட்சா பராதி
  • விசுவ இந்து பரிசத்
  • துர்கா வாகினி
  • பஜ்ரங் தள்
  • இந்து முன்னணி
  • அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
  • இந்து இளைஞர் சேனை
  • இந்து மகாசபை
  • முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்
  • ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம்
  • இந்து ஜனஜாக்குருதி சமதி
  • ஹனுமன் சேனா
  • இந்து சுயம்சேவக் சங்கம்
  • இந்து மாணவர்கள் சபை
  • ராம ஜென்மபூமி அறக்கட்டளை 
  • பாலகோகுலம்
  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்து மக்கள் கட்சி
  • சிவா சேனா
  • பாரதிய கிசான் சங்கம்
  • பாரதிய மஸ்தூர் சங்கம்
  • பாரதிய இரயில்வே சங்கம்
  • சம்ஸ்கார் பாரதி
  • அதிவக்த பரிசத்
  • அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
  • அகில பாரத ஆசிரியர்கள் பரிசத்
  • அகில பாரத முன்னாள் படையினர் சங்கம்
  • சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
  • சிறு தொழில் முனைவோர் சங்கம்
  • பாரதிய விகாஸ் பரிசத்
  • விவேகானந்த மருத்துவ இயக்கம்
  • சேவா பாரதி
  • கண் பார்வையற்றவர்கள் அமைப்பு
  • ஆதரவற்ற சிறார்கள் இல்லம்
  • லோக் பாரதி
  • எல்லைப்புற மாவட்ட மக்களின் பாதுகாப்பு சங்கம்
  • ஏகவலன் வித்யாலயம்
  • சரஸ்வதி சிசு மந்திர் 
  • வித்தியா பாரதி 
  • விஞ்ஞான பாரதி
  • பாரதிய ஆய்வு மையம் 
  • வனவாசி கல்யாண் ஆசிரமம்
  • தலித் மேம்பாட்டு சங்கம்
  • இந்திய-திபேத் கூட்டுறவு அமைப்பு
  • விஸ்வ சம்வத் கேந்திரம்
  • இந்துஸ்தான் சமச்சார்
  • பாரதிய விச்ர கேந்திரம்
  • இந்து விவேக் கேந்திரம்
  • விவேகானந்த கேந்திரம்
  • பாரதிய சிக்ஷா பரிசத்
  • அகில பாரதிய வரலாற்று மறுமலர்ச்சித் திட்டம்
  • சமஸ்கிருத பாரதி
  • கிரிடா பாரதி
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவ சங்கம் (RSS) – பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே
த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்
மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே
பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே
ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா
இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்
த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்
ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே
அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்
ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்
ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்
ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்
ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்
பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்
ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா
ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌
விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்
விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌
பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்
ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத் மாதா கீ ஜெய்!

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்