Paganism | பாகனியம்

கிறிஸ்துவம் அல்லது ஆபிரகாமிய(கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம்) மதங்கள் தவிர அல்லது அவை தோன்றுவதற்கு முன்பாக உலகம் முழுவதுவும் பொதுவாக காணப்பட்ட பலதெய்வ வழிபாட்டு முறையே paganism அல்லது பாகனிய மதம் எனப்படுகிறது.

மனிதர்கள் ஆதி காலத்தில் நெருப்பு, நீர், காற்று, இடி, ஆகாயம் என்று இயற்கையை வழிபட்டனர்.

உதாரணமாக, ஜீயஸ் பண்டைய கிரேக்கத்தில் வானத்தின் (இடி) கடவுள், இந்திரன் - இந்தியர்களில், தரனாக்கள் - செல்ட்களில், ஸ்காண்டிநேவிய மக்களிடையே - தோர், பால்டிக் மத்தியில் - பெர்குனாக்கள், ஸ்லாவ்களிடையே - பெருன். 

பண்டைய கிரேக்கர்களில் சூரியனின் கடவுள், எகிப்தியர்களில் ரா, மற்றும் ஸ்லாவ்களில் டாஸ்பாக். நீரில் நெப்டியூன் கடவுள் நெப்டியூன், இந்தியாவில் - சூரிய பகவான்.

உலகம் முழவதும் பூர்வகுடிகள் வழிபாடு இயற்கையை கொண்ட பல தெய்வ வழிபாடாக இருந்துருகிறது. என்ன அதன் பெயர்கள் தான் வேறு. பிற்காலத்தில் இயற்கைக்கு மனித வடிவம் கொடுத்து உருவ வழிபாடாக வழிபட்டான்.

அதேபோன்று நம் ஊர்களில் போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். இதுபோன்று உலகம் முழுவதும் உயிரிழந்த வீரர்களுக்கு hero stone அல்லது ஏதாவுது அடையாள குறி வைத்து வழிபட்டனர்.

எகிப்தின் மம்மிகளும் இங்கு காணப்படும் முதுமக்கள் தாழியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்முறையே.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே வகையான பல தெய்வ(polytheism) வழிபாட்டு முறையே காணப்பட்டது. எப்போது ஒற்றை தெய்வ(monotheism) வழிபாட்டு மதமான  கிறிஸ்துவம் ரோமின் அரசு மாதமாக மாறியதோ அது உலகம் முழுவதும் இருந்த பழங்குடியினர் பல தெய்வ வழிபாட்டை அழித்து தனது ஒற்றை தெய்வ வழிபாட்டை பரப்பியது. இதற்க்கு பின்பு வந்த ஆபிரகாமிய மதமான இஸ்லாமும் தனது பல தெய்வ வழிபாட்டை நபிகளுக்கு பின்பு ஒரு தெய்வ வழிபாடாக மாற்றிக்கொண்டு தனது பங்குக்கு பூர்வகுடி மக்களின் பல தெய்வ வழிபாட்டை சிதைத்தது.

இன்று உலகம் முழுவதும் paganism எனப்படும் பல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் மக்கள் வெறும் சொற்ப அளவிலே உள்ளனர். நமது ஹிந்து மத பல தெய்வ வழிபாட்டு முறையும் monotheism மதங்களால் சிதைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று நமது பல தெய்வ வழிபாட்டு முறைக்கு ஹிந்து என்று பெயர்கூட ஆபிரகாமிய மதங்களில் ஆதிக்கத்துக்கு அடுத்து ஒவ்வரு நாடுகளில் உள்ள பல தெய்வ வழிபாட்டு முறைக்கு எதோ ஒரு அடையாளத்தின் அடிப்படையில் பெயர் கொடுக்கப்பட்டது. அதற்க்கு முன்பு உலகம் முழவதும் இருந்த பல தெய்வ வழிபாடுகள் பெயர் இன்றியே இருந்தது. எனவே நமது பாரத தேசத்தில் காணப்படும் பல தெய்வ வழிபாட்டை பாகனியம் என்று எடுத்து கொண்டாலும் சரி இல்லை அது ஹிந்து என்று எடுத்து கொண்டாலும் சரி.. இரண்டுமே ஒன்றே.

நமது ஹிந்து மதம் என்பதே சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய போன்ற பல இந்தியா ஞான மரபுகளின் தொகுப்பே. ஹிந்து மதம் உருவ மற்றும் அருவ வழிபாட்டு முறைகளையும் மற்றும் நாத்திக சிந்தனைகளை கொண்ட ஆசீவகம் போன்ற மெய்யில் மரபுகளையும் ஏற்கக்கூடியது. அதேபோன்று பல தெய்வ வழிபாடு கொண்ட நமது மதம்  ராமனையோ அல்லது சிவனையே வணங்கினால் தான் ஹிந்து என்று வரையறுப்பதில்லை. அது நடுகல் வழிபாடோ, நாட்டார் வழிபாடோ, இயற்கை வழிபாடோ, ஜோதி வழிபாடோ இல்லை வேள்வித்தீ வழிபாடோ இம்மண்ணில் தோன்றிய அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஏற்கிறது. 

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்