இந்தியா சுதந்திரமும் செங்கோலும்!

வெள்ளையனுக்கு தெரியும் இந்த பூமி ஆன்மிகவாதிகள் நிறைந்த நாடு என்று. அதனால்தான் நமக்கு சுதந்திரம் கொடுக்கும் போது எந்த முறைபடி ஆட்சிமாற்றத்தை தெரிவிப்பது என்று நேருவிடம் கேட்டான்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முதல்நாள் (1947 ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் இஸ்லாமிய முறைப்படி தனது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டது. 

ஆனால் நாத்திகரானா நேருவுக்கு இந்த சடங்கு முறைகள் பற்றி குழப்பமாக இருந்தது மற்றும் இது பற்றி ராஜாஜிடம் அறிவுரை கேட்டார். பொதுவாக ஹிந்து முறைப்படி அரசர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்குக் கொடுத்து ஆட்சி மாற்றத்தை அறிவிப்பார். ராஜாஜியும் இந்த சடங்குகளை செய்வதற்க்கு திருவாடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு டெல்லிக்கு அழைத்தார்.

1947 ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஹிந்து மரபு படி ராஜகுருவாக திருவாடுதுறை ஆதினம் தலைமையில் ஆளுனர் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்று புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி, “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்ற வரியைப் பாடி முடிக்கும் போது பண்டார சுவாமிகள் செங்கோலை நேருவிடம் கொடுத்து ஆட்சி மாற்றத்திற்கான நிகழ்வு நடந்தது.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்