விலங்கு பண்ணை

விலங்கு பண்ணை என்னும் நாவலை ஜார்ஜ் ஆர்வெல் ரஷ்யா புரட்சியை உருவகப்படுத்தி எழுதியுள்ளார். 

இதில் ஜோன்ஸ் கிராமப்புறத்தில் ஒரு பண்ணையின் உரிமையாளராக வருகிறார். ஒரு நாள் இரவு ஓல்டு மேஜர் என்னும் பன்றி விலங்குகளிடையே கூட்டத்தை கூட்டி புரட்சிக்கான உரையை ஆற்றியது. அதில் மனிதன் நமது உழைப்பின் மூலம் உருவாகும் உற்பத்தி பொருட்களை எடுத்து கொண்டு நம்மை  அடிமைப்படுத்துகிறான் என்றது மற்றும் தனது கனவில் தோன்றிய புரட்சி பாடலையும் பாடி காட்டியது. அன்றிலிருந்து மூன்றாவது நாள் ஓல்டு மேஜர் இறந்து போனது. புரட்சியானது பன்றி, ஆடு,  மாடு, குதிரை, கோழி மற்றும் வாத்து போன்ற பண்ணை விலங்களுடையே பரவியது. ஒரு நாள் பண்ணைவிலங்குகள் புரட்சி செய்து உரிமையாளர் ஜோன்ஸை விரட்டிவிட்டு பண்ணையை கைப்பற்றி கொண்டன. ஓல்டு மேஜருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகள்  பண்ணை விலங்குகளை வழிநடத்தின. அதில் ஸ்னோபால் அறிவுத்திறன் வாய்ந்ததாகவும் மற்றும் நெப்போலியன் தான் நினைத்தை சாதிக்கும் தன்மை  கொண்டதாவும் வருகிறது. புரட்சியின் மூலம் கைப்பற்றிய அந்த கிராமத்து பண்ணை விலங்கியல் பண்ணை என்று  மாற்றப்பட்டது. அவற்றிக்கான ஏழு மிருகவியல் கொள்கைகள் வகுத்து அவை பண்ணையின் சுவற்றில் எழுதப்பட்டன.
  1. இரு கால்களில் நடப்பவை எதிரி
  2. நான்கு கால்கள் கொண்டவை மற்றும் பறப்பன நம் நண்பர்கள்.
  3. எந்த விலங்கும் ஆடை அணியக்கூடாது.
  4. எந்த விலங்கும் படுக்கையில் உறங்கக்கூடாது.
  5. எந்த விலங்கும் மது அருந்தக்கூடாது.
  6. எந்த விலங்கும் மற்ற விலங்குகளைக் கொல்லக்கூடாது.
  7. எல்லா விலங்குகளும் சமம்.
அவை தங்களுக்கான hoof and horn பொறிக்கப்பட்ட பச்சை நிற கொடியை உருவாக்கி கொடி கம்பில்  ஏற்றியது. ஜோன்ஸ் வெளியேற்ற பட்டபின் விலங்குகளே பண்ணையில் விவசாயம் செய்தன மற்றும் ஒவ்வொரு வாரமும் தங்களுக்குள் பொது  கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுவான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. அதில் ஸ்னோபால் கொண்டு வரும் அனைத்து தீர்மானங்களை நெப்போலியன் எதிர்க்கும். ஸ்னோபால் புரட்சி என்பது எல்லா பண்ணைகளிலும் நடைபெற வேண்டும் என்று முன்வைத்தால் நெப்போலியனோ ராணுவ கட்டமைப்பே பண்ணைக்கு தேவை என்று முன்வைக்கும். 

ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்னோபால் தனது காற்றாலை உருவாக்கும் திட்டத்தை கூறியது. அதில் காற்றாலைகள் மூலம் பண்ணைக்கு மின்சாரமும், வைக்கோல் மற்றும் தீவன  வெட்டும் கருவியாக பயன்படும் என்றது மற்றும் அது விலங்குகளின் உழைப்பை குறைக்கும் என்று முன்வைத்தது. ஆனால் நெப்போலியனோ அதை எதிர்த்து, தனது ஒன்பது நாய்களை கொண்டு ஸ்னோபாலை பண்ணையைவிட்டு துரத்தி அடித்தது. அடுத்து இந்த காற்றாலை திட்டம் தன்னால் கொண்டுவரப்பட்டது என்றும்  அது ஸ்னோபாலால் திருடப்பட்டது என்றும் சுக்வீலர் என்னும் பன்றியின் மூலம் பரப்புரை செய்தது. 

நெப்போலியன் தலைமையை கைப்பற்றியபின் பொதுக்கூட்டங்கள் கூடுவது தடைசெய்யப்பட்டது. இறந்த ஓல்டு மேஜரின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டு கொடிக்கம்பத்திற்கு கீழ் வைக்கப்பட்டது மற்றும் பண்ணைக்குள் போகும் முன்பு எலும்புக்கூடை கடந்து  அணிவகுப்பு மரியாதை செய்ய விலங்குகள் நிர்பந்திக்கப்பட்டன. ஒவ்வொரு ஞாயற்றுக்கிழமையும் பண்ணை வீட்டு முன் கூடி விவாதிக்காமல் தங்கள் கட்டளைகளை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டன. பன்றிகளை தவிர விலங்குகள் அனைத்தும் அடிமைகள் போல் நடத்தப்பட்டன.

நெப்போலியன் கற்றாலை கட்டும் பணியை மும்முரமாக தொடங்கியது. அதில் விலங்குகள் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டன. அதில் பாஸ்கர் என்னும் குதிரை மற்றவற்றை விட அதிக உழைப்பை செலவிட்டது கற்றாலை கட்டுவதுற்கு. ஒரு நாள் இரவில் காற்றாலை சுவர்கள் பலத்த புயலால் இடிந்து விழுந்தது. மறுநாள் காலையில் விலங்குகள் தாங்கள் கட்டிய காற்றாலை இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தன. நெப்போலியனோ இதற்க்கு ஸ்னோபாலும் அவர்களின் கூட்டாளிகளே காரணம் என்று கூறி  தனக்கு எதிராக விலங்கு பண்ணையில் எதிர்த்த விலங்குளை எல்லாம் ஸ்னோபாலின் கூட்டாளி என்று கொன்று குவித்தது.

பண்ணையில் பெரும் பஞ்சம் நிலவியது. ஆனால் சுக்வீலர் என்ற பன்றி கடந்த ஆண்டை விட அதிக அளவு விளைச்சல் கிடைத்துள்ளது என்று விலங்குகளிடையே கூறியது. அதே சமயம் விலங்குகளின் ரேஷன் பெருமளவு குறைக்கப்பட்டது மற்றும்  விலங்குகள் பஞ்சத்தால் இறந்தன. ஆனால் நெப்போலியனோ மற்ற பன்றிகளோ தங்கள் தேவைகளை குறைத்து கொள்ளவில்லை. உயர் பொறுப்பில் இருந்த பன்றிகள் உணவுகளை சுரண்டி கொளுத்தனா. 

நெப்போலியன் தனது பண்ணை அருகில் உள்ள ஃபிரட்ரிக்கு என்ற பண்ணை உரிமையாளரிடம் பழைய மர  கட்டைகளை விற்க உடன்படிக்கை செய்யப்பட்டது. ஃபிரட்ரிக்கு நண்பகத்தன்மை அற்றவர் என்று விலங்குகள் கூறின. ஆனால் அதை ஏற்காது மரக்கட்டைகள் விற்கப்பட்டன. கடைசியில் ஃபிரட்ரிக்கு கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றினான். அதன்பின் ஃபிரட்ரிக்கு விலங்கு பண்ணையை கைப்பற்ற முற்றுகையிட்டான். பாக்சர் உட்பட பல்வேறு மிருகங்கள் இந்தச் சண்டையில் படுகாயமடைந்தன. அதிக இழப்பிற்குப் பின் விலங்குகள் இந்தச் சண்டையில் வெற்றி அடைந்தன.

சில நாட்களில் பாஸ்கரின் உடல் நிலை வேலை செய்ய முடியாத அளவுக்கு மோசமாகின. உடனே ஸ்குவீலர் இது வேலைக்கு உதவாது என்று கசாப்பு கடைக்கு அனுப்பிவிட்டு விலங்குகள் முன் காப்பாற்ற முயன்றோம் ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பாஸ்கர் இறந்தது என்று பொய்யுரைத்து. 

அந்த ஏழு கட்டளைகள் அனைத்தும் மீறப்பட்டது. பன்றிகள் மது அருந்தின, பிற விலங்குகளை கொன்று குவித்தன, படுக்கையில் உறங்கின. சில வருடங்களில் பன்றிகள் உடைகள் உடுத்தி, கையில் சாட்டைகள் ஏந்தி நேராக நடக்க ஆரம்பித்தன. ஏழு கட்டளைகள் குறுகி ஒரே வாசகமாக மாறியது. "அனைத்து மிருகங்களுமே சமம் ஆனால் சில மற்றவையை விட அதிக சமம்". ஒருநாள் நெப்போலியன், பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இரவு விருந்தளித்தது. கலந்து கொண்டவர்கள் நெப்போலியனை அந்நாட்டிலேயே குறைந்த உணவு பெற்று அதிகமாய் உழைக்கும் மிருகங்களைக் கொண்ட பண்ணையைக் கொண்டவர் எனப் புகழ்ந்தனர். கடைசியில் அந்த பண்ணை மேனர் பண்ணை என்று மாற்றப்பட்டது.

கதையை ரஷ்யா புரட்சியுடன் ஒப்பிட்டு பார்ப்போம்

இந்த கதையில் வரும் ஓல்டு மேஜர் என்பது லெனினையும் ஜோன்ஸ் என்பது இரண்டாம் நிக்கோலஸை குறிக்கிறது. நிக்கோலஸின் ஆட்சி காலத்தில் மக்கள்  கடுமையான வறுமை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்தனர். கடைசியில் போல்ஷ்விக்குகள் புரட்சியின் மூலம் 1917 இல் ஆட்சியை கைப்பற்றின. புரட்சிக்குப்பின் சில வருடங்களில் லெனின் இறந்துவிடுகிறார்(1924).

அதற்கு அடுத்து வரும் ஸ்நோபால் கதாபாத்திரம் ட்ரொட்ஸ்கியையும் நெப்போலியன் என்ற கதாபாத்திரம் ஸ்டாலினையும் குறிக்கிறது. ஸ்னோபாலின் எல்லா பண்ணைகளிலும் புரட்சி என்பது ட்ரொட்ஸ்கியின் சர்வதே புரட்சி உடனும். காற்றாலை என்பது சோவியத்தின் ஐந்தாண்டு திட்டங்களுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. 

விலங்கு பண்ணையின் கொடி  சோவியத் கொடியோடு உருவகப்படுத்தப்படுகிறது. ஸ்டாலின் லெனின் உடலை பதப்படுத்தி வைத்த நிகழ்வு ஓல்டு மேஜரின் எலும்புக்கூடு நிகழ்வோடு ஒப்பிடப்படுகிறது. 

ஸ்டாலின் 1927 இல் ட்ரொட்ஸ்கியை நியோ போல்ஷ்விக் என்று முத்திரை குத்தி கட்சியில் இருந்து வெளியேற்றியது மற்றும் 1928 இல் ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டு ஸ்டாலினால் கொள்ளப்பட்டது, விலங்கு பண்ணையில் ஸ்னோபால் நாய்களால் துரத்தி அடிக்கப்படும் நிகழ்வோடு ஒத்துப்போகும் மற்றும் நெப்போலியனின் அந்த ஒன்பது நாய்கள் தான் சோவியத்தின் KGB. 

கட்சியில் தனக்கு எதிராக இருந்த போல்ஷ்விக்குகளை ட்ரொட்ஸ்கியவாதிகள் என்று கொன்று குவித்தது. குலாக் அல்லது வதை முகாம்களில் நடந்த நிகழ்வுகள் மற்றும் தொழிலார்களின் உழைப்பு சுரண்டல்.  சோவியத் பஞ்சம் மற்றும் பஞ்சத்தின் போது ஸ்டாலின் அதிக உபரி விளைச்சலில் கிடைத்துள்ளது என்று உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு விற்றது அப்படியே விலங்கு பண்ணையில் ஒப்பிடப்பட்டுள்ளது. 

ஃபிரட்ரிக்கு மற்றும் நெப்போலியன் ஒப்பந்தம் என்பது 1939 இல் ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் இடையே நடந்த ஒப்பந்தத்தை குறிக்கிறது. அதில் சோவியத் ராணுவ அதிகாரி ஹிட்லரின் படையெடுப்பு பற்றி எச்சரித்ததும், ஸ்டாலினின் அலட்சியத்தால் படையெடுப்புக்கு பின்பு  பல உயிர்களை பலிகொடுத்ததும் பற்றியும் அப்படியே  உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.

கடைசியாக நெப்போலியன் பில்கிங்க்டன் சந்திப்பு என்பது ஸ்டாலின், வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் சந்திப்பை குறிக்கிறது.

கடைசியாக பண்ணை விலங்குகள் ஜோன்ஸ் ஆட்சியில் இருந்ததை விட கொடுமையாக நடத்தப்பட்டன நெப்போலியன் ஆட்சியில். பொன்னுலகம் என்ற ஒன்று இவ்வுலகில் கிடையாது. பொன்னுலகம் என்ற வார்த்தை உணர்ச்சியை தூண்டி ஆட்சியை பிடிக்கும் ஒரு தந்திரம் மட்டுமே. 

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்