திராவிட மாயை
இங்கு வந்த டச்சு, இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு போன்ற காலனியாதிக்க நாடுகள் தங்களின் வணிக மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபட்டனர். இங்கு உள்ள வழிபாட்டு மற்றும் கலாச்சார அமைப்பு முறைகள் மத மாற்றத்திற்கு பெரும் சிக்கலாக இருந்ததால், கிறிஸ்துவ மிஷனரிகள் முதலில் வரலாற்று அடிப்படையில் உள்ள தமிழ் நூல்களை திருத்த முற்பட்டனர். அதன் மூலம் இங்குள்ள இலக்கியங்கள் கிறிஸ்து அடிப்படையில் எழுதப்பட்டவை என்று கூற முற்பட்டனர். இன்றுவரை திருக்குறளை கிறிஸ்துவ நூல் என்று உரிமை கோருகின்றனர்.
முதன்முதலாக பிராமணர்களையே மதமாற்றத்திற்கு உட்படுத்தினர்! பிறகு கிறிஸ்தவர்களின் புனிதநூலை விவாதத்திற்கு உட்படுத்தியதால் பிராமண மதமாற்றம் பெரிதும் பலனளிக்கவில்லை! இந்து சமூகக்கட்டமைப்பில் அடுத்த படிநிலைகளில் இருந்த வேளாளர் உட்பட முன்னேறிய பல சமூகங்களும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன! ஆனாலும் இவை எதுவும் பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை என்பதா ல் இனவாதத்தின் அடிப்படையில் பிரித்தாள்வது என்று முடிவு செய்தனர்.
1838 இல் மொழி ஆராய்ச்சி மற்றும் மத மாற்றத்திற்க்கு இந்தியா வந்த கால்டுவெல், இங்குள்ள தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றை ஒரு கூட்டாக மாற்றி திராவிட மொழி குடும்பம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். பின்னர் இவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று இன அடிப்படையில் முன்வைத்தார். தென்னிந்தியர்கள் அனைவரும் திராவிடர்கள் என்றும் மற்றும் வட இந்தியர்கள் அனைவரும் பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள் என்றும் வரையறுத்தார். இது கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு இனவாத அடிபடையில் மதம் மாற்ற உதவியது.. முதலில்ஃஃ பிராமணர் vs பிற சாதிகள் அடுத்து பிராமணர், பிற இடைநிலை சாதிகள் vs தலித்துகள் என்று பிரிவினை படுத்தி கிறிஸ்துவத்தை பரப்ப உதவியது..
இந்த கால்டுவெல் உருவாக்கிய திராவிடத்தை தான் பின் நாட்களில் நீதி கட்சியும், பெரியாரும் அரசியல் நோக்கங்களுக்காக கையில் எடுத்தனர்.
1916 இல் நடேச முதலியாரால் பிராமணர் இல்லாத பல தலைவர்களை அரசியலரீதியாக ஒன்றிணைத்து தென் இந்தியா நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது (இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், டி. எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், திவான் பஹதூர் பி. எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. ராமராய நிங்கார், திவான் பகதூர் எம். ஜி. ஆரோக்கியசாமிப் பிள்ளை, திவான் பகதூர் ஜி. நாராயணசாமி ரெட்டி, ராவ் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார், ராவ் பகதூர் எம். சி. ராஜா, முகமது உஸ்மான் சாகிப், ஜே. எம். நல்லுசாமிப்பிள்ளை, ராவ் பகதூர் கே. வேங்கட்டரெட்டி நாயுடு, ராவ் பகதூர் ஏ. பி. பாத்ரோ, டி. எத்திராஜுலு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், ஜே. என். ராமநாதன், கான் பகதூர் ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர், அலமேலு மங்கைத் தாயாரம்மாள், ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜுலு நாயுடு, எல்.கே. துளசிராம், கே. அப்பாராவ் நாயுடு, எஸ். முத்தையா முதலியார், மூப்பில் நாயர்).
இந்த தென் இந்தியா நல உரிமை சங்கம் தான் 1917 ல் நீதி கட்சியாக மாறியது.. இதன் பிரதானகொள்கை பிராமண எதிர்ப்பு மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.. இங்கு இவர்கள் திராவிடத்தை அரசியல்ரீதியாக கையில் எடுக்க காரணம் இதில் பெருவாரியாக இருந்தவர்கள் தெலுங்கு மற்றும் கன்னடர்கள். இதை பூசி மொழுகுவதற்கு தேவைப்பட்ட அடையாளம்தான் திராவிடம்.. நீதி கட்சி 1920 - 1937 வரை ஆட்சி செய்தது இதில் முதல் 12 வருடம் தமிழர் இல்லாதவர்தான் சென்னை மாகாண முதல்வராக இருந்தனர்..
சரி இன்று சமூக நீதினு குதிப்பவர்கள் அப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு என்ன செய்தனர்?
முதலில் அப்போது நீதி கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஜமீன்தார்களும் மற்றும் நிலவுடைமையாளர்களும் தான்.. அப்போது விவசாய துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய தேசிய வாதிகளால் கொண்டுவரப்பட்ட நில வருவாயை தள்ளுபடி செய்யும் தீர்மானத்தை எதிர்த்து நீதி கட்சியினர் வாக்களித்தனர்..
தனது 16 வருட கால ஆட்சில் ஒடுக்கப்பட்ட யாருக்கும் அமைச்சராவையில் பதவி கொடுக்கப்படவில்லை.கட்சியில் வெள்ளாளர், பிள்ளை, நாயுடு போன்ற உயர் சாதியினர்களுக்கே பதவிகள் கொடுக்கப்படுகின்றன என்று கூறி முஸ்லீம் மற்றும் தலித் தலைவர்கள் வெளியேறினர்..
1939 இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டவர் ஆலய நுழைவு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நீதி கட்சி தலைவர்கள்.
நீதி கட்சி தேசியத்திற்கு செய்தது என்ன ?
ஆங்கிலேயர்களின் ரெளலட் மற்றும் அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்ததோடு மற்றும் தேசிய வாதிகளின் ஒத்துழையாமை மற்றும் உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை எதிர்ப்பதையும் கொள்கையாக கொண்டு இயங்கியது. இதுதான் இன்றுவரையிலுமே இவர்களின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு . 1944 இல் நடந்த நீதி கட்சி மாநாட்டில் அண்ணா பேசியவை ("நாம் எவ்வளவு தான் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்கள் நமது திராவிட நாடு கோரிக்கையை ஏற்கவில்லை" என்று ஆதங்கத்துடன் பேசினார்).
1919 இல் காங்கிரஸில் சேர்ந்தார் ஈவெரா. குறிப்பாக அவரை ஈர்த்தது சென்னை மாகாண சங்கம் தான். இந்த சங்கம் நீதி கட்சியை எதிர்த்து காங்கிரஸால் உருவாக்கப்பட்ட அமைப்பு. 1925 இல் சேரன்மாதேவியில் நடந்த குரு குல பிரச்னையை காரணம் காட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.
1925 ல் குடியரசு நாளிதழ் மற்றும் சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் பிரதான கொள்கைகள் பிராமண எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம். பெரியாரின் கொள்கைபிடிப்பு எத்தகையது என்று சிலவற்றை இங்கு பார்ப்போம்..
பிராமண எதிர்ப்பு - பிராமண எதிர்ப்பு பேசிக்கொண்டு சில பிரமாணர்களுக்கு ஆதரவு தெரிவத்தவர் பெரியார் (1935இல் எம்.கே. கிருஷ்ணமாசாரிக்கு, 1942இல் அம்மு சாமிநாதனுக்கு, 1947இல் அருணாசல அய்யரை, 1949இல் மாவூர் சர்மாவோடு தோழமை, 1962இல் சீனிவாச அய்யருக்கும் டி.டி. கிருஷ்ணமாசாரிக்கும்). ஆரம்பத்தில் பிராமணர்களை உறுப்பினராக சேர்க்க கூடாது என்ற இருந்துவந்த திராவிட கொள்கை பின் நாட்களில் திமுக வில் சேர்த்து கொள்ளலாம் என்று மாற்றப்பட்டது.
மத எதிர்ப்பு - ஹிந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாக கொண்டவர் பெரியார். ஆரம்பத்தில் கிறிஸ்துவத்தை விமர்சித்து ஆங்கிலேயர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவும் கிறிஸ்துவ எதிர்ப்பை நிறுத்தி கொண்டார்.. இஸ்லாமுக்கு ஆதரவாக பல இடங்களில் பேசியுள்ளார். ஏன் இஸ்லாம் கடவுள் நம்பிக்கை கொண்ட மதம் கிடையாதா?
பகுத்தறிவு - பெரியார் தனது சகோதரர் துணைவி இறுதி சடங்கில் கலந்து கொண்டது பற்றி குடியரசில் வெளிவந்தது (ஸ்ரீமான் ஈ.வெ.ரா. செங்கல்பட்டு முதலிய இடங்களில் அழைப்புக்கிணங்கிப் போகத் தீர்மானித்தபடியால் வெள்ளிக் கிழமையே கிரமமாகத் தங்கள் குல வைஷ்ணவ சம்பிரதாயப்படி வேண்டிய கிரியையெல்லாம் பார்ப்பனரல்லாத பாகவதர்களைக் கொண்டு சகோதரரோடு கூடவே இருந்து நடத்திவிட்டு அன்றிரவே மேற்குறித்த இடங்களுக்குச் செல்ல சென்னைக்குப் பயணமானார்.& குடிஅரசு / 10.02.1927). பகுத்தறிவு என்பது ஊருக்குத்தான் திராவிட கழகத்தினருக்கு கிடையாதா?
பெண்ணியம் - பெண்கள் சொத்திற்காக அதிக வித்தியாச வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யக்கூடாது என்று மேடை மேடையாக பேசிவிட்டு 40 வயது வித்தியாசத்தில் மணியம்மையை மனர்ந்து கொண்டார்.
சமத்துவம் - 1934 இல் ஆங்கில அரசு கம்யூனிசத்தை தடை செய்தது. பெரியாரின் சில சோசியலிசா கொள்கைகள் முதலாளித்துவ நிலவுடைமையாளர்களை கொண்ட நீதி கட்சியால் ஏற்கமுடியவில்லை. அதுவரை பொதுவுடைமை என்று பேசியவர் பின் சமூக நீதினு நீதி கட்சிக்கு ஏற்றவாறு மாற்றிகொண்டார்..
அவரின் கொள்கை பிடிப்புக்கு சிறந்த உதாரணம் காங்கிரசை ஒழித்து கட்டுவதே தனது முதல் வேலை என்று வெளியேறியவர் பின் நாட்களில் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஹிந்தி எதிர்ப்பு - 1939 இல் ஹிந்திக்கு ஆதரவு தெரிவித்து போராடியவர். 1965 இல் எதிர்க்கட்சிக்கு (திமுக) சாதகமாகிவிடும் என்று நிறுத்திக் கொண்டார்.
சாதி ஒழிப்பு என்று பேசியவரின் வார்த்தையில் இருந்து வந்தவை ("தலித் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம்")
1938 இல் நீதி கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1944 இல் நீதி கட்சி திராவிட கழகம் என்று மாற்றப்பட்டது.
1968 இல் கீழ்வெண்மணியில் வர்க அடிப்படையில் 44 பேர் எரித்து கொளுத்திய சம்பவம் குறித்து பெரிதும் கருத்து தெரிவிக்கமால் தவிர்த்துக்கொண்டவர் பெரியார்.
இங்கு திராவிடம் திராவிடம் என்று இனவாதம் பேசுவது எல்லாம் அரசியல் செய்வதற்கும், மத மாற்றத்திற்கும் மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தேசியத்திற்கு எதிராக மக்களை போராட வைக்கவும்தான் பயன்படுத்துகின்றனர்...
ஆரியம் என்பது பண்புகளையும் மற்றும் திராவிடம் என்பது ஒரு இடத்தையும் குறிக்கும் சொல்.
அம்பேத்கரும் தனது ஆய்வுகளின் அடிப்படையில் ஆரியம் மற்றும் திராவிடம் என்னும் இன கோட்பாட்டை மறுத்தார்
Comments
Post a Comment