காந்தியும் கம்யூனிசமும்
காந்தியிமும் கம்யூனிசமும் நேர் எதிரான நிலைப்பாட்டை கொண்ட சித்தாந்தங்கள். காந்தியை பொறுத்தவரை இலக்கை அடைவதற்கு அகிம்சையே பிரதான வழி ஆனால் கம்யூனிசமோ அதற்கு நேர் எதிராக வன்முறையை பிரதானமாக கொண்டது. காந்தியின் போராட்டம் என்பது முதலில் சமூக தளத்திலும் அதன்பின் அரசியல் தளத்திலும் படிப்படியாக நிகழும் மாற்றங்கள் ஆகும். ஆனால் கம்யூனிச போரட்டம் என்பது வன்முறையின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி மொத்த சமூக அமைப்பையும் பொருளியல்ரீதியாக மாற்றி அமைப்பது.
உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்று எல்லாவற்றையும் அணுகக்கூடியவர் காந்தி. அவரது கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் விவாதங்கள் அடிப்படையில் சமரசத்திற்கு உட்பட்டவை. ஆனால் கம்யூனிசமோ எந்த ஒரு சமரசத்தையும் தனது சித்தாந்த அடிப்படையில் ஏற்காது, மேலும் தனக்கு தடையாக உள்ள அனைத்தையும் அழித்தொழிப்பு செய்யவே சொல்லுகிறது. கம்யூனிசத்தில் வன்முறையை நீக்கிவிட்டு சமரசத்திற்கு உட்படுத்தினால் அது காந்திசத்திலேயே வந்து நிற்கும்.
பொருளியல் மற்றும் சித்தாந்த அடிப்படையில் இவ்விரண்டிற்கும் உள்ள நிலைப்பாட்டை பார்ப்போம்.
பொருள்முதல்வாதம்
மார்க்ஸின் பொருள்முதல்வாதம் என்பது தரவுகள் அடிப்படையிலான அறிதலின் வழியாக சமூகத்தை கட்டமைப்பது. அவர் எல்லாவற்றையும் மூலதனம், உற்பத்தி உறவுகள், உபரி உற்பத்தி மற்றும் உடமை என்று பொருளியல் அடிப்படையிலே சமூகத்தை அணுகினார். மதம் ஒரு அபின் (போதைப்பொருள்) என்று எதிர்த்தார்.
காந்தி பொருளியல் மற்றும் பொருள்முதல்வாதத்தால் கட்டமைக்கப்படும் சமூகம் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று நிராகரித்தார். மதம் மற்றும் ஆன்மிகமே சமூக ஒழுக்கத்திற்கான பிரதான நெறி என்று முன்வைத்தார்.
உற்பத்தி
மார்க்ஸின் உற்பத்தி என்பது தொழிற்புரட்சியால் ஏற்பட்ட பெரு உற்பத்தியை ஆதரிக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன் உள்ள நிலவுடமை சார்ந்த கைத்தொழில்களை நிராகரிக்கிறது. கிராமங்கள் மற்றும் நிலவுடைமையை ஒழித்து நகர்ப்புற வளர்ச்சியை முன்னிறுத்துவதே அதன் பிரதானம்.
காந்தியின் உற்பத்தி என்பது தொழிற்சாலை பெரு உற்பத்தியை விட மக்கள் தேவைக்கு ஏற்ப குடிசை உற்பத்தியை முன்வைத்தார். நிலவுடமை சார்ந்த கிராம வளர்ச்சியை பிரதானமாக ஆதரிக்கிறது.
பொருளாதாரம்
மார்க்ஸ்: பாட்டாளி வர்க்கத்தால் கட்டமைப்பட்ட சர்வாதிகார அரசு மொத்த பொருளாதார சந்தையையும் கட்டுப்படுத்தும். அது வளங்கள் அனைத்தையும் வர்க்க வேறுபாடுன்றி சமமாக பகிர்ந்து அளிக்கும்.
காந்தி: நாட்டின் பொருளாதாரத்தை பரவலாக்க கிராமம் மற்றும் அது சார்ந்த குடிசை தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும் மற்றும் முதலாளிகள் அதன் அறங்காவலர்களாக அமைய வேண்டும் என்றார். காந்தியின் நிலவுடமை சார்ந்த கிராமிய பொருளாதாரத்தையே கிராமிய கம்யூனிசம் எனப்படுகிறது.
அரசு
பாட்டாளி வர்க்கததால் கட்டமைக்ககப்பட்ட கம்யூனிச அரசு ஏகபோக சர்வாதிகாரத்துக்கு வழிகோரியது.
காந்தி மேற்கத்திய ஜனநாயக முறையில் சில மாற்றங்களை செய்து மாநிலங்களை விட கிராமங்களுக்கு அதிக அதிகாரத்தை தரும் கிராமிய சுயராஜ்யத்தை முன்வைத்தார்.
கம்யூன்
இரண்டுமே வர்க்கம் மற்றும் சமூக வேறுபாடுகளை களைந்து சமத்துவ குழு வாழ்க்கையே வலியுறுத்துகிறது. காந்தியின் ஆசிரமங்களே கம்யூன் அமைப்புமுறைக்கு சிறந்த உதாரணம்.
Comments
Post a Comment