இந்துத்துவா − வரலாற்றுப்பார்வை
இந்துமதம் பற்பல தத்துவத் தருக்கள் அடங்கிய தத்துவவனம்! தத்துவ உரையாடல்களின் வழியே தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டிருக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஞானச்சோலை, இந்துமதம்! அது தன் அறிதல்களை முதன்மையாக முன்வைப்பதாலேயே ஆயுதந்தாங்கிய மடத்தலைவர்களை இதுவரை அனுமதித்ததில்லை, இனியும் ஆதரிக்க வாய்ப்பில்லை! சமகால இந்திய மதங்களான பௌத்தம், சமணம் போன்றவற்றை அறிந்து அதனோடு உரையாடி தம்மைப் புதுப்பித்துக் கொண்ட வரலாற்றையுடையது இந்துமதம்!
பழங்குடியின நாக, அசுரவேதங்களில் துளிர்த்த இந்துமதத்தின் ஞானமரபு, வேளாண்குடியினரின் நால்வேதங்களில் நிலைகொண்டு அனைத்து உயிர்களுக்குமான வேதாந்தமாகக் கனிந்து மென்மேலும் வளர்ந்து கொண்டுள்ளது! வழிபாட்டு மரபினை ஆறு தரிசனங்களாக ஆதிசங்கரர் தொகுத்தார். அவையாவன சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம்! தத்துவ தரிசனங்களும் ஆறுமரபாகத் தொகுக்கப்பட்டுள்ளன! அவையாவன
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், உத்தரமீமாம்சை, பூர்வமீமாம்சை! இவை பல்லாயிரக்கணக்கான குருமரபுகளின் மூலமாக பல்லாரயிமாண்டுகளாாக உரையாடலின் மூலம் தொகுக்கப்பட்ட ஞானக்களஞ்சியம்!
இந்துமத்தின் தத்துவ மற்றும் ஞானமரபுகள் பல்லாயிரக்கணக்கான வழிபாடுகள், அவற்றிற்கு இடையேயான உரையாடல்களால் தொகுக்கப்பட்டு தெய்வங்கள், தேவதைகள் மற்றும் நெறிநின்று வாழ்ந்து மறைந்தபின்னரும் தம் குடிவழியினரைப் பேணும் மூத்தோர் என அனைவரின் பங்களிப்பை உளளடக்கியது! பேராலயங்களில் நிகழ்த்தப்படும் பெரும் யாகங்களின் வழிநின்று பல்லாயிரம் மக்களால் தொழப்படும் பெரும் வழிபாடும், ஒற்றை இலையினை தனியொரு பீடத்திற்கு அர்ப்பணிக்கும் எளிய தனிமனிதனின் எளிய வழிபாடும் தன் பங்களிப்பை வழங்குகின்றன! சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் இந்துமதம் என்பது தத்துவ ஞானச்சரடுகளால் கோர்க்கப்பட்ட பலதெய்வ வழிபாடு @ Polythesism.
பலதெய்வ வழிபாடு என்பது சமூகத்தின் இயல்பான வழிபாட்டுமுறை! ஆதிக்குடிச் சமூகங்கள் அனைத்துமே பல தெய்வ வழிபாட்டைப் பின்தொடர்ந்தவை, இன்றும் பின்தொடர்பவை! கிழகத்தியப் பெரு மதமான இந்துமதமும், மேற்கத்தியப் பெருமதங்களான ஆதிகுடி மதங்களான கிரேக்க மற்றும் ரோமானிய மதங்களும், ஜப்பான் மற்றும் சீனத்தின் தொல்மதங்களும் பலதெய்வ வழிபாட்டு நம்பிக்கைகளே! இன்றும் தொல்குடிகளாக வாழ்ந்து வரும் ஆப்ரிக்க பழங்குடியின மதங்ளும் பலதெய்வ வழிபாட்டை முன்வைப்பவையே! ஆனால் பிற தொல்குடிச் சமூகங்களின் பலதெய்வ நம்பிக்கைகள் ஞானச்சரட்டினால் வலுவாகக் கோர்க்கப்படாதவை! எளியோரின் நம்பிக்கைகளைப் போதுமான அளவில் பிரதானப்படுத்தாதவை! பலதெய்வ வழிபாட்டு மதங்கள் தங்களின் நம்பிக்கைகளின் தலைமைப் பீடங்கள் என ஒற்றைத் தலைமையை அங்கீகரிக்காதவை! அவற்றிற்கு ஆயுதமேந்தும் அதிகாரம் வழங்காதவை! அதனால் ஒற்றைத் தலைமை கொண்ட ஒற்றைத் தெய்வ மதங்களால், அதிலும் ஆயுதபலம் தாங்கிய மதத்தலைமையால் முற்றிலும் சிதைக்கப்பட வாய்ப்புள்ளவை, சிதைக்கப்பட்டவை, சிதைக்கப்பட்டு வருபவை. மத்திய கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா என இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏராளம்!
பிரபலமான ஒற்றைத் தெய்வ @ Monothesism மதங்களாவன யூதமதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்! இதில் காலத்தே முந்தைய தீர்க்கதரிசிகளால் உருவாகிய ஏக இறைத்துவ மதம் யூதம்! கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமென யூத மதத்தவரை முன்நிறுத்துவதால் மதமாற்றத்திற்கானப் போரை யூதமதம் முன்னிறுத்தியதில்லை! யூதனாகப் பிறந்த ஏசு கிறிஸ்து யூதமதத் தலைமைப்பீடத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கலகக்குரலாக எழுந்ததும் யூதமமத்தலைமை ரோமானிய சாம்ராஜ்யத்தின் துணைகொண்டு வீழ்த்தியதும் ஏசுவை தீர்க்கதரிசியாகக் கொண்டு கிறிஸ்தவம் எனும் இன்னொரு ஏகஇறைத்துவ நம்பிக்கை கிளைத்தெழக் காரணமாகியது! ஏசு கிறிஸ்து தன் நம்பிக்கையை சக மக்களுக்கு எடுத்துச் சொல்வதை ஒரு சமயக்கடமையாக முன்வைத்ததால் கிறிஸ்தவர்களின் சமயக்கடமைகளில் மதமாற்றமும் ஒன்றானது! யூதமதத்தின் சீர்திருத்தப் பிரிவாகத் தொடங்கிய கிறிஸ்தவம், தொடர்ந்து அதிகரித்த ஆதரவாளர்களால் தனிமதமாகப் பரிணமித்தது! ஏசு கிறிஸ்துவை நிராகரித்த யூதர்களை கிறிஸ்தவத்தின் பால் ஈர்ப்பதை விட பலதெய்வ வழிபாட்டாளர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுவது கிறிஸ்தவத்திற்கு எளிதாகப்பட்டது. மதமாற்றத்திற்கானப் போரைக் கிறிஸ்தவம் அமைப்பு ரீதியாக ரோமசாம்ராஜ்ஜியத்தில் இருந்து தொடங்கியது!
ஆரம்பகால கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கையில் பன்மைத்தன்மையைப் பேணியது! லியோ, பீட்டர், கான்ஸ்டன்டைன் ஆகியோரால் கிறிஸ்தவத்தின் (ஞானவாதக் கிறிஸ்தவம்) பன்மைத்தன்மை ஒழிக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்கம் தனித்த கிறிஸ்தவமாகியது! ரோம் மற்றும் கான்ஸ்டான்டிநோபிளை மையமாகக் கொண்டு ரோமன் கத்தோலிக்கம் பெரும்பான்மை கிறிஸ்தவர்களை ஆண்டது! அதனோடு பலமத நம்பிக்கைகளை ஆயுதவழியில் அழித்துத் தன்னைப் பெருக்கத் தொடங்கியது.
ரோமானியப் பேரரசு கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவித்ததால், அன்றிலிருந்து ஏனைய பலஇறைக் கொள்கையை அழித்தொழிக்கத் தொடங்கியது. சிலைவணக்கத்தை ஏற்காததால் ரோமானிய ஆயிரமாண்டுகளாக புகழுடன் இயங்கிவந்த ஆலயங்கள் அழிக்கப்பட்டன! விக்ரகங்கள் ஒழிக்கபபட்டன! பல இறை ஆலய வழிபாட்டாளர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க மதத்தலைமை, சர்வ வல்லமை வாய்ந்த அரசியல் தலைமையாகவும் உருவெடுக்க ஆரம்பித்த பின் ரோமன் கத்தோலிக்கம் ரோமானியப் பேரரசாக உருவெடுத்தது. ரோமன் கத்தோலிக்கத்தின் மதத்தலைமையாகிய போப் ராணுவத்தின் தலைமையாகவும், நிர்வாகத் தலைமையாகவும், தசமபாகத்தின் வழியாக பொருளாதாரத் தலைமையாகவும் விளங்கத் தொடங்கியதால் ஐரோப்பாவின் கத்தோலிக்க நம்பிக்கைகளைக் கொண்ட நாடுகளின் ஏகபோக பேரரசாகியது, அப்பேரரசு மத்தியகிழக்கின் துருக்கிவரை பரவியது! புதிய பொருளாதார சந்தைகளுக்காக ஐரோப்பிய நாடுகளும், மதச்சந்தைகளுக்காக ரோமன் கத்தோலிக்கமும் காலனியாதிக்கத்தை முன்வைத்தன! ஐரோப்பிய ரோமன் கத்தோலிக்க நாடுகளுக்காக அடிமைமுறையினை மதரீதியாக அங்கீகரித்தது! டச்சு மற்றும் போர்த்துக்கீசிய நாடுகளுக்கு காலனிநாடுகளைப் பிரித்துக் கொடுக்குமளவிற்கு போப் ஐரோப்பியப் பேரரசாக விளங்கினார்.
கத்தோலிக்கப் பாதிரிமார்களின் பாவமன்னிப்பு சார் பிரச்சனைகளால் ரோமன் கத்தோலிக்கத் தலைமைக்கு எதிராக கலகம் எழுந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் மலர்ந்தது! சீர்திருத்தக் கிறிஸ்தவமும் மதமாற்றத்தைப் பொறுத்தவரை அதே கொள்கையினை ஆனால் சற்றே கொடூரம் குறைந்த வழிமுறைகளைப் பின்பற்றியது! தென் அமெரிக்காவில் ரோமன் கத்தோலிக்கமும், வடஅமெரிக்காவில் சீர்திருத்தக் கிறிஸ்தவமும் பல கடவுள்களை வழிபடும் பழங்குடியினரை வன்முறையின் வாயிலாகவும், திட்டமிட்டுப் பரப்பப்பட்ட நோய்களின் வாயிலாகவும் முற்றும் முழுவதுமாக அழித்தொழித்தன! பல தெய்வ வழிபாட்டினை முன்மொழியும் பழங்குடியின மக்களின் ஆப்ரிக்கா ஐரோப்பியக் கிறிஸ்தவநாடுகளின் வேட்டைக்காடாகியது.
இடைப்பட்ட காலத்தில் மத்தியகிழக்கில் யூதம் மற்றும் கிறிஸ்தவம் தவிர்த்த மற்றோர் ஏக இறை நம்பிக்கை உருவானது! யூதம் மற்றும் கிறிஸ்தவத்தின் கலாச்சாரத் தொடர்ச்சியாகத் தன்னை முன்வைத்தது! யூதத்தின் பழைய ஏற்பாடு, கிறிஸ்தவத்தின் புதிய ஏற்பாடு ஆகியவற்றின் நீட்சீயாக முன்வைத்த இஸ்லாம் துளிர்த்தது. யூத மற்றும் கிறிஸ்தவ தீர்க்கதரிசிகளின் தொடர்ச்சீயாக இஸ்லாம் தனது தீர்க்கதரிசியாக முன்வைத்து தனியொரு ஒற்றைக் கடவுள் மதமாக பரிணமித்தது!
இஸ்லாமியத்தின் நிறுவனரும் அம்மதத்தின் படி இறுதித் தீர்க்கதரிசியான முகம்மது நபியின் நபித்துவக் காலத்திற்கு பின்னருமே அவர் வாழ்ந்த சவூதிஅரேபியாவில் பல கடவுள் வழிபாடும் விக்ரக @ சிலைவழிபாடும் இருந்து வந்தது. சவூதிஅரேபிய மக்கள் 365 நாட்களுக்கும் 365 கடவுள்களை வழிபட்டு வந்தனர்! அந்த 365 கடவுள்களின் விக்ரகங்களைச் சிதைத்தே தனது தீர்க்கதரிசனத்தை முகம்மது நபி அறிவித்தார்! மத அடிப்படையிலான அரசியல் ரீதியிலான சட்டங்கள் உலக வழக்கில் இருப்பவை! ஆனால் கால மாற்றத்திற்கு உட்பட்டவையாகவே வழங்கப்பட்டிருப்பவை! இந்துக்களின் ஸ்மிருதிகளும், கிறிஸ்தவர்களின் கானான் சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் வாயிலாக தொடர்ச்சியாக புதுப்பித்தல் சாத்தியம்! ஆனால் இஸ்லாம் அதற்கான வாய்ப்பை இறைச்சட்டத்தின் பெயரால் நிராகரிக்கிறது! உதாரணமாக ஞானத்தேடலுக்கான தகுதியை பிறப்பின் அடிப்படையில் தீர்மானித்த மனுநீதி எனும் இந்துக்களுக்கான அரசியல் சட்டம் கைவிடப்பட்டு பிறப்பால் அனைவரையும் சமமெனப் பேணும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காந்தி மற்றும் இதர இந்துமத பிரதிநிதிகளின் உரையாடல்களின் வழியாக இந்துக்களின் மதச்சட்டமாகிறது. கிறிஸ்தவத்தின் அடிமைமுறை, பெண்களுக்கு எதிரான சமுகச்சுரண்டல்களை நியாயப்படுத்தும் சில பைபிளின் கருத்துரைகள் கத்தோலிக்கர்களுக்கான பைபிளிலிருந்து நீக்கப்படுகின்றன! இரு மதங்களும் கடந்த நூற்றாண்டிலிருந்தேனும் விமர்சன உரிமையை வன்முறையின் வழியில் எதிர்கொள்வதை நிறுத்தியிருக்கின்றன! இஸ்லாம் இதில் முரண்படுகிறது. இஸ்லாமியச் சட்டமான ஷரியத் புதுப்பிக்கப்பட இஸ்லாமியத்தில் இடமில்லை! அது மதநிந்தனையாகவே கருதப்படுகிறது, இந்நூற்றாண்டுவரை வன்முறையினை தன் மீதான விமர்சனத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது!
இஸ்லாம் தனது வழிபாட்டாளர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியின் குடிமகனாக வாழ்வதையே வாழ்வியல் கடமையாக அறிவித்திருப்பதாலும் இஸ்லாமே மனிதர்களுக்கான ஒற்றை மதமென @ மார்க்கமென முன்வைத்திருப்பதாலும் மதமாற்றமும், மதச்சட்டங்களை குடிமைச்சட்டங்களாக்குவதும் முஸ்லீம்களின் மதக்கடமையாகிறது! ஏக இறைமதங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் தத்தம் நம்பிக்கைகளுக்கென பல நூற்றாண்டுகளாக சிலுவைப்போரை நடத்தியுள்ளன! இரண்டும் இணைந்து பலதெய்வ வழிபாட்டுக்கு எதிராகப் பெரும் போர்களையும் நடத்தியுள்ளன! இஸ்லாம் பாரசீகம், எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்க தேசத்தில் அரசியல் போர்களுக்குப் பின் மதப்போரையும் நிகழ்த்தியுள்ளது! இந்துமதம் வன்முறையால் சிதைக்கப்பட்ட பின்னரும் வாழ்ந்து வந்தாலும் இஸ்லாத்தால் இந்தியாவில் பௌத்தம் முற்றிலுமாகச் சிதைத்தொழிக்கப்பட்டது!
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் பெரும்பகுதி எட்டு நூற்றாண்டுகள் இஸ்லாமியர்களாலும் இரண்டரை நூற்றாண்டுகள் கிறிஸ்தவர்களாலும் ஆளப்பட்ட வரலாறுடையது! இக்காலங்களில் அரசியல் போர்களும் அதன் நீட்சியாக மதப்போர்களும் தொடர்ந்து நிகழ்ந்தன! அதன் வரலாற்று சாட்சியங்களை அயோத்தி, காசி, சோமநாதபுரம், ஶ்ரீரங்கம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல திருத்தலங்களிலும் காணலாம்! சுருக்கமாக இந்துமதம் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு கொண்ட, அரசு அதிகாரத்தில் இருந்த இரு பெரும் ஏக இறை மதங்களால் ஆயிரமாண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகி வந்திருக்கிறது! இதனால் இந்து மதம் இந்துமதச் சிந்தனையாளர்களால் அத்தகைய கட்டமைப்பு கொண்ட கிழக்கத்திய ஏக இறைநம்பிக்கையை உருவாக்கப்படுகிறது அதில் தலையாயது தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரியசமாஜம்!
ஆரிய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதிகளால் அவர்களால் 1875 இல் தொடங்கப்பட்ட இயக்கமாகும். எப்படி தென்பாரதத்தில் திருமாலினை அடிபணியும் அனைவரும் ஒரே சாதியினர் அவர்களுக்கிடையே வேறுபாடுகள் கிடையாது என்று ராமானுஜர் முன்வைத்தாரோ அதே வழியில் வடக்கில் உதித்தவர் தயானந்த சரஸ்வதிகள். ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் சம்பிரதாய வேறுபாடுகளை களைந்து வேதகால மரபான சனாதன தர்மத்திற்கு திரும்பவேண்டும் எனக் கோருகிறது ஆரிரசமாஜம். குணாதிசிய அடிப்படையிலான சதுர்வர்ணத்தை ஏற்கிறதே தவிர பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தையும் மற்றும் சாதிய கட்டமைப்புகளையும் ஆரியசமாஜம் ஏற்பதில்லை. ஆரியா சமாஜம் சமூக தளத்தில் கலப்பு திருமணம், சமபந்தி போஜனம், சாதிய ஒழிப்பு, பிற மதத்திற்கு மாறிய ஹிந்துக்களை தாய் மதத்துக்கு திரும்ப செய்வது மற்றும் விக்கிரக வழிபாட்டு முறையை மறுப்பது என்று இயங்கிவருகிறது. ஆரிய சமாஜம் வேள்வித் தீ வழியே அருவ வழிபாட்டுக்கு ஆதரவளிக்கிறது இன்று ஹிந்துக்களிடையே உள்ள உருவ வழிபாடு, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை விட்டுவிட்டு வேதகால சனாதன தர்மத்தைப் பரிந்துரைக்கிறது. அனைத்து இந்துக்களுக்கும் ஞானத்தேடலுக்கான அங்கீகாரத்தை வழங்குவதோடு, மதமாற்றப்பட்ட இந்துக்களின் ஞானத்தேடலின் பொருட்டு இந்துமதத்திற்கு மீட்டெடுக்கும் சுத்திச்சடங்குகளையும் வழங்கி வருகிறது என்றாலும் கூட விக்ரக வழிபாட்டு மறுப்பும், வேதத்தின்பாலான பரப்புரையும் ஆரியசமாஜத்தை உயர்குடிகளின் நம்பிக்கையாகத் தேக்கியது!
அனைவருக்குமான இந்துமதத்தின்பாலான தேடலினை பெரும்பாலானோர் ஏற்குமாறு எளிமைப்படுத்தவும் அதனை மரபுமீட்சி மற்றும் அரசியல் எழுச்சிக்காகவும் முன்னிறுத்த இந்துமதம் கடந்த நூற்றாண்டில் ஒரு உயர்குடி குடும்பத்தில் இருந்து எளிய கனவானைத் தேர்ந்தெடுத்தது − இந்துமதத்தின் பல்லாயிரமாண்டுகாலத் தொடர்ச்சியை பராமரிப்பதோடு அதுசார் சுரண்டலை பெருமளவு குறைக்கும் கர்மயோகத்தை முன்வைக்கும் சதுர்வேத நம்பிக்கையானாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் கண்டடைந்தது!
வேதாந்தத்தின் சாரமான கர்மயோகத்தை ஞானமார்க்க யோகியான விவேகானந்தர் முன்வைத்தாலும் கூட காந்தியே அதனைக் மக்கள் தளத்தில் சாத்தியமாக்கினார்! ஆரியசமாஜத்தின் கனவுகளோடு எளிய இந்துக்களையும் அரசியல் சமூக தளத்தில் ஒன்றிணைத்தார்! சதுர்வர்ண முறைப்படி அரசால் அங்கீகரிக்கப்படாதோர் ஆயுதமேந்துவதை முற்றிலுமாகத் தடைசெய்தார்! இந்துக்கள் அனைவருக்குமான சமூக, கலாச்சார அரசியல் உரிமைகளைச் சாத்தியப்படுத்தினார், சுருக்கமாக இந்திய தொல்குடி இந்துக்களின் புதிய நீதியாகிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை இந்து ஞானமரபின் படி வன்முறையற்ற தீவிர உரையாடல்களின் வழியே சாத்தியமாக்கினார்! நவீன இந்துமதம் காந்தியால் உருப்பெற்றது! ஐரோப்பியக் கனவான்களின் மதநல்லிணக்கத்திற்காநக வீன இந்துமதச் சிற்பியான காந்தி, இந்துமதத்தின் சிறப்புக்கூறுகளுடன் இந்துக்களையும் இந்துக்களின் நலனையும் பெரியளவில் இழக்க நேரிடுகையில் ஆரிய சமாஜத்தின் கனவுகளையும் காந்தியின் செயல்முறைகளையும் உள்ளடக்கிய இந்துமத ஞானமரபின் பாதுகாப்பிற்காகவும் உலகில் எஞ்சி நிற்கும் ஒரே ஒரு பல கடவுள் வழிபாட்டினைப் (polythiesm) பராமரிக்கவும் ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சார அமைப்பு காலத்தின் தேவையாகிறது, அது ராஷ்ட்ரிய ஜனசங்கம் ஆக மலர்கிறது!

Comments
Post a Comment