சாதிகள்
இந்தியாவில் ஒரு சாதி தலைவரால் கூட்டக்கூடிய மக்கள் திரளை வர்க்க அடிப்படையிலோ அல்லது சித்தாந்த அடிப்படையிலோ மக்களை கூட்ட முடிவதில்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் சாதி இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சீக்கியர் மற்றும் முகமதியர் போன்ற மதங்களில் சாதிகள் போன்ற உட்ப்பிரிவுகள் இருபினும் அது இந்து மதத்தில் உள்ளது போல் முக்கியத்துவம் பொருவதில்லை. இந்து மதத்தில் சாதி என்பது புனிதமாக கருதப்படுவதும் மற்றும் அதற்கு விதிகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் சமூகம் இயங்குவதே காரணம். பொதுவாக இந்தியாவில் சாதிகளின் எவ்வாறு உருவாகின என்பனபற்றி பல யூகங்கள் உள்ளன. அவை கடவுளால் உருவாக்கப்பட்டது, வேதங்களில் இருந்து தோன்றியது, தொழில்கள் அடிப்பட்டையில் உருவானது மற்றும் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் அம்பேத்கர் இதை "இந்தியாவில் சாதிகள்" என்ற நூலில் எவ்வாறு சாதிகள் உருவாகியிருக்கும் என்று மூன்று கேள்விகளின் அடிப்படையில் கூறுகிறார்.
- சாதி எவ்வாறு நிலைத்து நிற்கிறது ? எவ்வாறு உருவாகியது?
- சாதியின் தோற்றுவாய் எது ?
- சாதி வேலியை தனக்கு தானே முதலில் கட்டமைத்துக்கொண்ட வர்க்கம் எது ?
சாதி எவ்வாறு நிலைத்து நிற்கிறது ? எவ்வாறு உருவாகியது?
சாதி எவ்வாறு இந்தியாவில் நிலைத்து நிற்கிறது மற்றும் எவ்வாறு உருவாகியது என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். அவை ஹிந்து சமூகத்தில் நிலவும் திருமண முறையே.
உலக நாகரிகங்கள் அனைத்திலும் புறமணம் என்னும் வழக்க முறையே காணப்படுகிறது. புறமணம் என்பது ஒரு குழு அல்லது இனம் மற்றொரு குழுவுடனே திருமணம் புரிவதாகும். இவ்வாறு இனங்கள் கலப்பதால் சாதி என்ற கட்டமைப்பு உருவாக சாத்தியமில்லை.
ஆனால் இந்தியாவில் அகமணம் என்னும் தன் இனத்திற்குள்ளே திருமணம் செய்யும் முறை காணப்படுகிறது. இந்தியர்கள் ரத்த உறவுகளை தவிர்த்து தங்கள் இனத்திற்குள்ளே திருமணம் செய்யும் முறையை உயர்வாக கருதியதே சாதியின் தோற்றத்திற்கு காரணமாகியது.
இந்தியாவிலும் திருமணம் என்பது புறமண வழக்கமாக இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இவ்வாறு புறமண வழக்கத்தில் உள்ள ஒரு இனம் தனக்கு தானே கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு தன் இனத்திற்குள்ளே திருமணம் புரிய தொடங்கியதே சாதிய கட்டமைப்புக்கு வழிவகுத்திருக்கும். இவ்வாறு ஒரு இனம் அகமண முறையில் தனிமைப்படுத்தி கொண்டதை அடுத்து சங்கலி தொடராக மற்ற இனங்களும் அகமண முறைக்கு உட்படுத்திருக்க வேண்டும்.
ஒரு இனம் புறமணத்தில் இருந்து அகமண முறைக்கு மாறும் நிகழ்வு அவ்வளவு எளிதானது அல்ல. அது தனது பாலின விகிதத்தையும் மற்றும் வெளியாருடனா இனக்கலப்பை தடுப்பதற்கும் தனக்கு தானே விதிகளை விதித்து கடுமையாக கடைபிடித்திருக்க வேண்டும். ஆக தன்னை சாதியாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பும் இனம் தன் இனத்தில் உள்ள ஆண் பெண் எண்ணிக்கையை சமஅளவில் பேணுவது அவசியமாகிறது. அதுவே சாதிக்குள் உள்ள சிக்கலும் கூட.
ஆண் பெண் சமநிலையை பேணுவதற்கு ஹிந்து மதத்தில் கடைபிடிக்கும் பின்வரும் வழிமுறையை காணலாம்,
- உடன்கட்டை ஏறுதல் - இறந்த கணவனுடன் மனைவியை எரித்துவிடுதல்.
- வற்புறுத்தி பெண்ணை விதவையாக வைத்திருத்தல்
- பிரம்மச்சரிய வாழ்க்கையை திணித்தல் மனைவியை இழந்தவன்மீது.
- திருமண வயது அடைந்து பருவமெய்தாத பெண்ணை மனைவியை இழந்தவனுக்கு கட்டிவைத்தால்.
இதில் முதல் இரண்டு முறைகள் கணவனை இழந்த பெண்ணின்மீது திணிக்கப்படுகிறது. ஒரு விதவை தன் இனத்தில் மீண்டும் மறுமணம் செய்வதால் தன் இனத்தில் ஒரு ஆண் குறைகின்றான் அல்லது அதே விதவை இன்னொரு இனத்தில் உள்ள ஆணை மணக்கும்போது இனக்கலப்பு ஏற்பட்டு சாதி அமைப்பு உடையும் அல்லது புதியதோர் சாதி அமைப்பு உருவாகும். இந்த பாலின சமநிலை மற்றும் அகமண முறையை நிலைநிறுத்த இவ்வழிமுறைகளை சாதிகளில் கடைபிடிப்பதை காணலாம். ஆனால் இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
மனைவியை இழந்த ஆண்களுக்கும் இன கலப்பை தடுப்பதற்கும் மற்றும் பாலின விகிதாசாரத்தை நிலைநிறுத்தவும் பிரம்மச்சரியம் மற்றும் பருவமெய்தாத பெண்ணை திருமணம் செய்தல் திணிக்கப்பட்டது. ஆண் என்பவன் ஒரு இனத்தின் பலமாக கருதப்பட்டதால் பெண்களை போன்று உடன்கட்டை ஏறாமல் அதற்கு இணையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்த விதிமுறைகளை குழுக்கள் பேணிக்காப்பதாலே இனக்கலப்பு ஆகாமல் அகமணம் நிலைத்து நிற்க உதவுகிறது. இந்த அகமணங்ளே ஹிந்து சமூகத்தில் சாதியை இறுக்கமாக கட்டமைக்கிறது. இந்த அகமண அமைப்பும் சாதியும் ஒன்றே.
சாதியின் தோற்றுவாய் எது ?
மார்க்ஸின் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்பட்டையில் உலகில் உள்ள நாகரிகங்கள் அனைத்தும் ஆதிபொதுவுடைமை சமூகம், அடிமைவுடைமை சமூகம், நிலவுடமை சமூகம் மற்றும் தனிச்சொத்துடைமை சமூகம் என்ற பரிணாம படிப்படையிலே வகைப்படுத்தப்படுகிறது. இந்த சமூக அமைப்பு அனைத்திலும் பொருளியல் மற்றும் அறிவு அடிப்படையிலே வர்க்கங்கள் பிரிக்கப்பட்டன. இந்த வர்க்க அடிப்படையில் இருந்தே சாதிகள் உருவாகின.
முதலில் மனிதன் தனது உணவுக்காக நாள் முழுவதும் வேட்டையாடி கொண்டு இருந்தான். பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டு அதிகப்படியான விளைச்சலை ஈட்டினான் அதாவுது தனது உணவுத்தேவைக்கு அதிகமான உணவை உற்பத்தி செய்தான். இதனால் தனது நேரத்தை விவசாயத்தை தவிர பிற தொழில்களில் செலவிட செய்தான் மற்றும் புதிய தொழில்கள் உருவாகின. இதில் விவசாயத்தில் முதன்மையாக கருதப்பட்ட பெரியவர்கள் பின்னர் பூசாரிகள் ஆகினர்(அவர்களே பிராமணர்கள்) மற்றும் அதற்கு அடுத்த நிலையில் இருந்த குழு தலைவர்கள் தன்னை ஆண்டையன் அல்லது அரசன் என்று நிலைநிறுத்தி கொண்டனர். இவ்வாறு சமுகத்தில் தொழில்கள் அடிப்பட்டையில் பல படிநிலைகள் உருவாகின.
- பிராமணர்கள் அல்லது புரோகிதர்கள்
- சத்திரியர்கள் அல்லது படைவீரர்கள்
- வைசியர்கள் அல்லது வணிகம் செய்பவர்
- சூத்திரர்கள் அல்லது கைவினை தொழில்களில் ஈடுபடுவோர்.
இந்த தொழில்கள் அடிப்படையிலான வர்க்கம் உலகம் முழுக்க காணப்பட்டது. ஆனால் இந்தியாவில் படைவீரர்கள் படைவீரர்களுக்குள், புரோகிதர்கள் புரோகிதருக்குள் அகமணம் செய்துகொண்டதால் இந்தியாவில் அவை சாதிகளாக தேங்கிவிட்டன. இந்த தொழில்கள் அடிப்படையில் உருவான வர்க்கமே பின்னாளில் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமமாக மாறியது.
சாதி வேலியை தனக்கு தானே முதலில் கட்டமைத்துக்கொண்ட வர்க்கம் எது ?
இந்த சாதி அமைப்பு முறையானது வேதங்கள் உருவாவதற்கு முன்பே தோன்றியவை. ஹிந்து வேதங்கள் பிற்காலத்தில் அதை வர்ணாசிரம அடிப்படையில் சாதியாக நிலைத்துநிற்க சில விதிகளை தொகுத்து வழங்கியதே தவிர அதுதான் சாதியின் ஊற்றுக்கண் இல்லை.
பொதுவாக உயர்வாக கருதும் ஒருவருடைய செயல்களை பின்பற்றுவதே மனித மற்றும் சமூக இயல்பு. அதன் அடிப்படையில் பிராமணர்களே இந்த நால்வகை வர்க்கத்தில் முதன்மையாகவும் மற்றும் கவுரவுமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்களே முதலில் தங்களுக்குள் இறுக்கமான விதிகளை வகுத்து அகமண முறைக்கு வழிவகுத்திருக்க வேண்டும். இதை பார்த்து அடுத்த சமுகப்படிநிலையில் உள்ள வர்க்கங்கள் அதை பின்பற்ற தொடங்கியிருக்க வேண்டும்.
Comments
Post a Comment