ராமானுஜர்

1000 வருடங்களுக்கு முன் ஆன்மிகக்கதை முன்நிறுத்தி சமூக புரட்சி செய்தவர்... தனது விசிட்டாத்துவைத்தின்படி, பக்தியின் மூலம் யார் பெருமாளின் திருவடியை பற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் வைணவர்கள் அவர்களிடையே சாதி வேற்றுமை மற்றும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று முன்வைத்தவர்..  தலித்துகளின்  ஆலைய நுழைவுக்கு அடித்தளம் இட்ட மகான்.. அவர்கள் அனைவருக்கும்    திருகுலத்தோர் என்று நாமம் இட்டார்.. இது காந்தியின் ஹரிஜன் போன்றது..

வைஷ்ணவம் என்னும் சமயத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றி மக்களிடையே கொண்டு சேர்த்தவர்...  பெண்களை தனது சீடர்களாக ஏற்று பாலினம் பாராது சமத்துவமாக நடத்தியவர்..  இவரின் செயல்களை கண்டு உடன் இருந்த அந்தணர்களே  கொல்ல  முயற்ச்சி செய்தனர்..  

இவர்காலத்தில் வைஷ்ணவம் வேகமாக மக்களிடையே பரவியது ராமானுஜரின் சமய கருத்துக்களால்.  அதனால் கோபம் அடைந்த இரண்டாம் குலோத்துங்கன் ராமானுஜரை கொல்ல முற்பட்டான்.. இதை அறிந்த எம்பெருமான் ஸ்ரீரங்கம் விட்டு மைசூரில் சில வருடங்கள் தங்கினார்.. 

ஒரு முஸ்லிம் இளவரசி பெருமாள் சிலையின்மேல் கொண்ட அன்பின்பால் அவளுக்கு ஸ்ரீரங்க சன்னிதானத்தில் சிலை அமைத்தார்.. அது துலக்க நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது..  இது அவரின் மத நல்லிக்கணத்துக்கு எடுத்துக்காட்டு.. 

அந்தணர்கள் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சில மரபுகளை உடைத்து.. எல்லோருக்கும் பேதம் பாராமல் போதித்தவர்.. 

காந்தியின் சமூக புரட்சியானது ராமானுஜரின் சித்தாந்தமே..

இது பெரியார் மண் அல்ல இது ஆன்மிகவாதிகளின் மண்..

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்