சாங்கியம் | ஆதி இயற்கை வாதம்

இந்து ஞான தரிசனங்கள் ஆன்மிக  தத்துவங்களையும் சரிபாதி பௌதிக  தத்துவங்களையும் கொண்டவையாகும்.  இந்து ஞான தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமாகும். இது முழுக்க முழுக்க பௌதிக(Materialism) அடிப்படையிலான  தரிசனமாகும். இந்த தரிசனமானது கபிலரால் தொகுக்கப்பட்டது மற்றும் இதன் காலகட்டம் உபநிஷ காலகட்டத்தை சார்ந்தது. இது ஆதி இயற்கை வாதம் அல்லது சடவாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சாங்கிய மரபுக்கு பின் தோன்றிய ஞான மரபுகளும், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற மதங்களும் மற்றும் வேதாந்தங்களும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்தே தம்மை புதுப்பித்து கொண்டன.

ஒவ்வரு தத்துவமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை(அல்லது காரிய காரணத்தை) தர்க்கரீதியாக பல தளங்களில் விவாதித்து தரிசனமாக மாறுகிறது. வேதங்கள் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பிரம்மமே காரணம் என்று கூறுகிறது. ஆனால் சாங்கியம் வேதங்களின் பிரம்ம இருப்பை மறுத்து இப்பிரபஞ்சம் பருப்பொருள்களில் இருந்து தோன்றின என்று தர்க்கரீதியாக விவாதிக்கின்றன.

மனிதன் அகத்துயரம், புறத்துயரம் மற்றும் இயற்கை நியதி என்னும் துயரம் என்னும் மூவகை துயரங்களால் ஆட்கொள்கிறான் மற்றும் இத்துயரங்களை மனிதன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே இவ்வகை துயரங்களின் காரிய காரணத்தை ஒருவன் சாங்கிய அடிப்படையில் புரிந்துகொண்டால் அவன் அச்சம் அடையாமல் அத்துயரங்களில் இருந்து விடுவித்து கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படையாகும்.

சாங்கியதின் அடிப்படை மூன்று கோட்பாடுகள்,
  • பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது.
  • பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும்.
  • முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது.

பருப்பொருள்களில் இருந்து தோன்றியதே இப்பிரபஞ்சம் என்பது சாங்கியதின் முதல் கோட்பாடாகும். இப்போது உள்ள அறிவியலும், மார்க்சிசமும் உலகம் பருப்பொருளால் ஆனது என்றே  கூறுகிறது. நாம் இன்று காணும் இயற்கை(உலகம்) மற்றும் சுற்றுசூழல்கள் எல்லாம் பருப்பொருள்களாலானது என்கிறது. 

அதேபோன்று நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரிய காரணம் உண்டு என்கிறது சாங்கியம். காரிய காரண அடிப்படையில் நாம் இப்போது காணும் உலகம் அல்லது இயற்கை காரியம் என்றால். இதன் மூல காரணம் எது என்று விவாதிக்கும் போது. சாங்கியம் ஆதி இயற்கை என்னும் பருப்பொருளே என்கிறது. அதேசமயம் கடவுள், பிரம்மம், பரம்பொருள், ஆத்மா போன்றவற்றை சாங்கியம் ஏற்பதில்லை. சாங்கியம் உருவற்ற பிரம்மம் என்றதிலிருந்து எவ்வாறு பருப்பொருளாலான இயற்கை(அல்லது பிரபஞ்சம்) தோன்ற முடியும் என்று வேதத்துடனான தனது கேள்வியை முன்வைக்கிறது.

அதேபோன்று ஆதி இயற்கையானது முக்குணங்கள் சமநிலையை இழந்து எதிர் எதிர் வினை புரியும்போது நாம் காணும் பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறது சாங்கியம். அம்மூன்று முக்குணங்களின் தொடர் எதிர்வினையே இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. மேற்கத்திய மார்க்சிச  சிந்தனையில் materialistic dialectics என்பார்கள், அதாவுது இரண்டு பொருட்களின் முரணியக்கத்தால் புதிய பொருட்கள் உருவாகுகின்றன அது சமூகத்தை இயக்க நிலையில் வைக்கிறது. அதைத்தான் சாங்கியமும் முக்குணங்களின் முரணியக்கம் என்கிறது மற்றும் இந்த முரணியக்கமே பிரபஞ்சத்தை இயக்குகிறது. அந்த முக்குணங்களின் குணங்களை சத்துவகுணம்(Positive Movement), தமோகுணம்(Negative Movement), ரஜோகுணம்(Neutral Movement) என்கிறது சாங்கியம்.

சாங்கியத்தின்படி ஆதி இயற்கையானது படிப்படியாக பரிணாம் அடைந்து நாம் காணும் இயற்கையாக(உலகம்) மாறியுள்ளது. இயற்கையை பிரகிருதி  என்று வரையறுக்கிறது சாங்கியம். ஆதி இயற்கையில் இருந்து எப்படி உயிரினங்கள் படிப்படியாக தோன்றின என்பதை பிரகிருதி, மகத், அகங்காரம், மனம், பஞ்ச ஞானேந்திரியங்கள்(காது, தோல், கண், மூக்கு, நாக்கு), பஞ்ச கர்மேந்திரியங்கள்(வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய்), ஐந்து தன்மாத்திரைகள்(ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம்), ஐந்தாற்றல்கள்(நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று) என்ற 24 தத்துவங்களின் மூலம் சாங்கியம் விளக்குகிறது.

சாங்கிய தத்துவத்தில் இரு முக்கிய கேள்விகள் எழுந்தன ஒன்று இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ? காரணம் இல்லை என்றால் தத்துவம் எதற்க்கு ?  இரண்டு, பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர்  போன்ற குணங்கள் குடியேறின? இந்த கேள்விக்கு பதிலாக புருஷன்(பரிபூர்ண சாட்சி) என்னும்  தத்துவத்தை சாங்கியர்கள் உருவாக்கினார். இங்கு புருஷன் என்பது பிறப்பும் இறப்பும் இல்லாதவன், உருவம் இல்லாதவன், எல்லா இடத்திலும் இருப்பவன் ஆதி இயற்கை போலவே புருசனும் முழுமுதற் பொருள். அதுஒரு பரிபூரண மௌனசாட்சி மட்டுமே. இது கிட்டத்தட்ட ஆன்மா போன்றுதான். ஜடத்தை அறிவதே புருஷனின் வேலை அவன் இருத்தலுக்கும் அதுவே காரணம். பிரபஞ்ச தோற்றம், ஜட உடலில் எவ்வாறு மனம், அறிவு, உயிர் உருவாகின என்பதற்கான பதிலாகவும், காரணமாகவும், காரியமாகவும் புருஷனை முன்வைத்தார்கள் சாங்கியர்கள்.

பிற்கால வேதாந்தங்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் அத்வைதம் தர்க்க பூர்வமாக விவாதித்து சாங்கியத்தை மறுக்கிறது. சங்கரர் பின்வரும் கேள்விகளை சாங்கியத்தை நோக்கி முன்வைக்கிறார்.

  • ஒவ்வொன்றுக்கும் காரிய காரணம் உண்டெனில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ?
  • உயிரற்ற ஜட பொருளிலில் இருந்து எவ்வாறு உயிருள்ள ஜட பொருள் உருவாக முடியும்? பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர்  போன்ற குணங்கள் குடியேறின?
  • இந்த உயிர் எங்கிருந்து வந்தது எங்கு போகிறது?
  • முக்குணங்கள் சமநிலையை இழக்க காரணம் எது ? அது எப்போது சமநிலையை அடையும்?

இவற்றுக்கு பதிலாக உயிர், பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமாக பிரமத்தை தனது அத்வைத கோட்ப்பாட்டில் முன் வைக்கிறார் சங்கரர். ஜீவாதாமாவும் பரமாத்மாவும் ஒன்று என்றும் மற்றவை  எல்லாம் மாயை என்று தனது அத்வைத தத்துவத்தில் கூறுகிறார்.

இப்போது உள்ள நூல்களில் சாங்கியத்தை முழுவதுமாக உள்வாங்கிய நூல் பகவத் கீதையே ஆகும். அது சாங்கியதின் சாரங்களை எடுத்து கொண்டு ஆன்மிக தத்துவங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டது. கீதை சாங்கியதின்  ஆதி இயற்கை அல்லது பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமாக பரம்பொருளை முன்வைக்கிறது. அதே சமயம் புருசனுக்கு பதில் அது ஆத்மாவை முன்வைக்கிறது. அதேசமயம் கீதை இறைக்கு பதில் கடமையே(அல்லது செயலே) முக்கியம் என்ற கர்ம  ஞானத்தை முன்வைக்கிறது.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்