துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம்
நவீன பௌதிக தத்துவங்களுடனும் ஆன்மிக தத்துவங்களுடனும் தர்க்கரீதியாக வாதிட்டு தம்மை புதுப்பித்து கொண்டவை வேதாந்தங்கள். நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள் அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன.
உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் ஆன்மிக தத்துவங்கள் விளக்க முடியாத அந்த இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் முழுமையாக மறுப்பதும்மில்லை. வேதாந்தங்கள் சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக வாதங்களுடனும் விவாதித்தும் பிரம்மத்தை உபநிஷங்களிடம் விவாதித்தும் புதுப்பித்துக்கொண்டவை வேதாந்தங்கள்.
உடனே ஆன்மிக தத்துவங்களை குதர்க்கமாக அறிவியல் கண்ணோட்டத்தில் சிந்தித்து அதற்க்கு தரவுகளை கோரக்கூடாது. அது ஒருவரின் ஞான அல்லது சிந்தனைகளில் இருந்து தோன்றிய தத்துவங்கள். அந்த தத்துவார்த்தங்களில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு நமது சிந்தனைகளை விரிவடைய செய்ய வேண்டும்.
நமது வேதாந்தகளில் மிக முக்கிய மூன்று தத்துவங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம்.
அத்வைதம்
பரமாத்வாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்பதாகும். பிரம்மத்தில் இருந்து ஜீவாத்மா வேறுபடாத நிலை(இரண்டற்ற நிலை). இத்தத்துவம் ஆதிசங்கரரால்(கிபி 788-820) தொகுப்பட்டதாகும். தானே பிரம்மம் என்று உணர்வதே பரமாத்வை அடைவதற்கான வழி. பிரம்மத்தை தவிர இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் மாயை என்கிறது அத்வைதம். இந்த மாயையே மாயாவாத கோட்பாடு எனப்படுகிறது.
விசிஷ்டாத்வைதம்
சித்து அசித்து போன்ற பொருள்களுடன் கூடிய பிரம்மம் ஒன்றே என்பதாகும். பரம்பொருள் இப்பிரபஞ்ச உடல் என்றால் அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் பரம்பொருளின் அங்கங்கள் ஆகும். இத்தத்துவம் ராமானுஜரால்(கிபி 1017-1137) தொகுப்பட்டதாகும். இறைவனை சரணாகதி அடைவதே பிரம்மத்தை அடைவதற்கான வழி.
துவைதம்
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்பது துவைதம் ஆகும். பரமாத்மா தனி ஜீவாத்மா தனி இரண்டும் ஒன்றன்று என்பதாகும். இத்தத்துவம் மத்வாச்சாரியாரால்(கிபி 1238 – 1317) தொகுப்பட்டதாகும். ஆதிசங்கரரின் அத்வைததையும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைததையும் இது ஏற்பதில்லை. ஞானமே பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது.
Comments
Post a Comment