தோள் சீலைப் போராட்டம் | Upper Cloth Revolt

மனித சமூகம் ஆடை உடுத்த ஆரம்பித்த தருணம் தான் நாகரிகத்தின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அந்த ஆடை தான் மனிதனை தரத்திலும் தகுதியிலும் உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுகிறது. அந்த ஆடை அணியும் விஷயத்தில் இடுப்புக்கு மேல் ஆடை அணிய கூடாது என்று இப்போதுள்ள கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒடுக்கப்பட்டனர். குறிப்பாக பெண்களுக்கு தங்களின் மார்பகங்களை மறைப்பது உயர் சாதியினருக்கு மரியாதை கொடுக்காமல் அவமதிப்பதாக கருதப்பட்டது. இதனால் பெண்களுக்கு மேல் ஆடை அணியவும்  மற்றும் மார்பகத்தை மறைக்கவும் உரிமை மறுக்கப்பட்டது. 

கிபி 19 ம் நூற்றாண்டில் திருவாங்கூரில் ஆட்சி அதிகாதாரத்தில் அங்கம் வகித்த நம்பூதிரிகள், வெள்ளாளர்கள் மற்றம் நாயர்கள் உயர்வாகவும், தோற்றவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று ரீதியில் கிபி 18 ல் மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக இருந்த அனந்த பத்மநாப நாடாருக்கு அடுத்து நாடார் சமூகம் ஒடுக்கப்பட்டு நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மேல் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. நாடார், நாயர், ஈழவர், புலையர், பறையர் உள்ளிட்ட 18 சாதிகளுக்கு கடுமையான வரிகளும் மேல் ஆடை அணிய தடையும் விதிக்கப்பட்டது.

"தோள் சீலை” என்பது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அணிவதற்கு உரிமை உடைய ஆடையாகும். பெண்களின் கச்சின் மீது அணியும். மேல்முண்டு என்பதையே தோள்சீலை எனக் குறிப்பிடுகின்றனர். அதைப் பிற சாதிப்பெண்கள் அணிவது, சாதிக் கட்டுமானத்தை மீறிய செயலாகக் கருதப்பட்டது. இந்த தோள் சீலைப் போராட்டம் அங்கு நடந்த கலவரம் மற்றும் அரசு ஆணை மூன்று பகுதிகளாக பார்க்கப்படுகிறது.

தோள்சீலைப் போராட்டம் – முதல் நிலை(1822-1823)

கிறிஸ்துவத்துக்கு மாறிய பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் தங்கள் மார்பகங்களை குப்பாயம் என்னும் உடை  கொண்டு மறைத்து அதற்க்கு மேல் தோள் சிலை போன்ற மெல்லிய மேலாடை அணிந்து கொண்டனர். உயர் சாதி பெண்கள் போன்று உடை அணிவதை கண்டு உயர் சாதியினர் கோபம் அடைந்தனர். இதனால் மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. பெண்களின் மேலாடை பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் ஆங்கில அரசின் பிரதிநிதியிடம் மிஷனறிகள் கூட்டாக மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். அப்பிரதிநிதியோ பிரச்சனைகளைப் பரிசீலித்துத் தீர்ப்பு வழங்குமாறு பத்மநாதபுரம் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அதன் பெயரில் 23-5-1823 இல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த தீர்ப்பின் படி ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள் மட்டும் குப்பாயம் என்னும் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

தோள்சீலைப் போராட்டம் – இரண்டாம் நிலை(1827-1829)

சிறிது காலம் அமைதியாக இருந்த தோள்சீலைக் போராட்டம் 1827 முதல் மீண்டும் கொழுந்து விட்டு பற்றியெரியத் துவங்கியது. முதலில் நெய்யூரில் தொடங்கிய கலவரம் படிப்படியாக ஆற்றூர், திற்பரப்பு அருமனை புலிப்பனம், கண்ணூர் போன்ற பகுதிகளுக்கும் பரவியது. 

தோள்சீலைப் போராட்டம் – மூன்றாம்  நிலை(1858-1859)

கிறிஸ்துவ நாடார் பெண்களை தொடர்ந்து இந்து நாடார் பெண்களும் தங்களின் மார்பகங்களை குப்பாயம் கொண்டு மறைத்து அதற்க்கு மேல் தோள்சீலை போன்ற மேலாடை அணிந்தனர். இது உயர் சாதியினரிடையே மேலும் கோபத்தை அதிகரித்தது. அதேசமயம் சில இடங்களில் பெண்களில் மார்பக துணிகளை கிழித்து மரத்தில் தொங்கவிட்டு அசிங்கப்படுத்தினர்.

இந்தக் காலக்கட்டத்தில் குமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு எனும் இடத்தில் நாடார் சமுதாயத்தில் தோன்றிய ‘முடிசூடும் பெருமாள்’ எனவும், ‘முத்துக் குட்டி சுவாமிகள்’ எனவும் அழைக்கப்படும் வைகுண்டர் எனும் சமூகச் சீர்திருத்தவாதி (1809 - 1851) சாதி பேதமின்றி ஊர்ப் பொதுக் கிணறுகளில் குளிப்பதற்கும், சேர்ந்து உணவருந்தவும் ஏற்பாடு செய்தார். மேலும் சாணார் சமூகப் பெண்கள் எக்காரணம் கொண்டும் திறந்த மார்போடு இருக்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரின் மார்க்கம், நாடார் சமூகத்தினரிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத் தக்கது.

பின்னர் 1859 சூலை 26 அன்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து நாடார் பெண்களும் கிறித்தவப் பெண்களைப் போல குப்பாயம் அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டாலும், உயர்சாதிப் பெண்கள் (நம்பூதிரி, நாயர், வெள்ளாளர்) அணிவது போன்ற ஆடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வுரிமை கிடைக்கவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 30 அன்று கோட்டாறு பகுதியில் கிறித்தவ நாடார்களுக்கும் நாயர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் இந்து நாடார்கள் கிறித்தவர்களுடன் கைகோர்த்துப் போராடினர். பின்னர் கிறித்தவ மிஷனரிகளின் வழிகாட்டலில் போராட்டம் தொடர்ந்தது. 1865-ஆம் ஆண்டு ஆயில்யம் திருநாள் ராமவர்மா மகாராஜா மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் அனைத்து சாதியைச் சார்ந்த மக்களும் மேலாடை அணிய அனுமதி வழங்கப்பட்டது.


கொல்லால் எச். ஜோஸ் எழுதிய "தோள் சீலைப் போரட்டம்" இந்நூலில் நாடார்களின் முன்னேற்றத்திற்கு கிறிஸ்துவ மிஷனரிகள் தான் காரணம் என்றும் மற்றும் நாடார் சமூகத்தின் கல்வி அறிவு, உடை நாகரிகம், பொருளாதார வளர்ச்சிக்கு கிறிஸ்துவே மிஷனரிகளே காரணம் என்பது போல் எழுதியுள்ளது கிறிஸ்துவ மிஷனரிகளின் வரலாற்று திரிப்பு வேலையே. 

கேரளா மற்றும் தமிழ் நாட்டில் பரவி இருந்த நாடார்கள் ஒரே மாதிரி ஒடுக்கப்பட்ட நிலையில் இல்லை மற்றும் மேலாடை அணியும் உரிமை கூட திருவாங்கூர் ஆட்சி பகுதியில் மட்டும் இந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பதில்கள்,



Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்