Advaita Vedanta vs Virtual Reality

Virtual Reality மற்றும் Agumented Reality என்ற simulation techniques மனிதனை அறிவியலின் அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. இவை gaming, cinema, 3d object modeling, IT, medical என்று பல அறிவியல் துறைகளில் இதன் பயன்பாடு பறந்து விரியத்தொடங்கிவிட்டது.

Virtual Reality என்பது ஒரு கணினி மென்பொருட்களின் மூலம் உருவாக்கும் மாயத்தோற்றமாகும். உதாரணத்துக்கு  Automobile துறையில் ஒரு machine அல்லது vehicle ளின் prototype உருவாக்கி பார்க்க உதவுகிறது. இது உண்மையான பாகத்தை வடிவமைத்து assemble செய்து பார்க்கும் நேரத்தையும் அதன் பொருள் செலவையும் குறைக்கிறது. அதேபோன்று மருத்துவத்தில் VR மூலம் உடல் பாகங்களை வடிவமைத்து அதற்க்கு VR device கள் மூலமே அறுவை சிகிச்சை செய்து பயிற்சி எடுக்க முடியும்.

அதேபோன்று Agumented Reality என்பது நாம் காணும் உண்மையான surface layer மீது சில பொருட்கள் இருப்பதுபோல் ஒரு காட்சி தோற்றத்தை உருவாக்குவதாகும். Google maps, Pokemon Go game போன்றவை மிக சிறந்த உதாரணமாகும்.

இவை இரண்டின் அடுத்த கட்டம்தான் Mixed Reality or Hybrid Reality என்பது நிஜ உலக சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்ட மாயா தோற்றத்தை ஒருங்கிணைப்பதாகும்.

இந்த Virtual Reality போன்ற சிந்தனைகள் நமது மரபுக்கு ஒன்றும் புதிது அல்ல மற்றும் இந்து ஞான மரபில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற சிந்தனைகள் இருந்துவந்திருக்கிறது. பௌத்தத்தில் இதை சூனியவாதம் என்கிறது மற்றும் சங்கரரின் அத்வைதத்தில் இதை மாயை என்கிறது. 

சூனியவாதத்துக்கும் அத்வைதத்துக்கும் சிறிய வேறுபாடு உண்டு. சூனியவாதம் பிரபஞ்சத்தில் எல்லாமே மாயை என்கிறது. அத்வைதம் பிரம்மம் மட்டும் மெய் மற்றவை எல்லாம் மாயை என்கிறது.

எப்படி Virtual Reality கேம்களில் நமது சுயத்தை மறந்து அது உருவாக்கும் மாயா சூழலில் மூழ்குகிறோமோ. அதேபோன்று அத்வைதம் சொல்கிறது, ஜீவாத்மா தனது சுயத்தை மறந்து பிரபஞ்சம்(பிரம்மம்) தோற்றுவித்த மாயா சூழலில் சிக்கி காமம், குரோதம் மற்றும் மோகம் போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறது என்கிறது.

இந்த மாயையில் இருந்து விடுபட்டு எப்போது ஜீவாத்மா தன்னை தானே பிரம்மம் என்று உணர்கிறதோ. அதுவே பிரம்மத்தை அடைவதற்கான வழி என்கிறது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் non duality அதாவுது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றேயாகும்(பிரம்மத்தில் இருந்து ஜீவாத்மா வேறுபடாத நிலை).

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்