Matrix vs Advaita Vedanta

1999 களில் வெளிவந்த matrix படத்தின் கதையானது ஹிந்து தத்துவமரபில் வரும் அத்வைத வேதாந்தத்துடம் ஒத்துப்போகும். 

படத்தில் AI Machine கள் ஒரு Virtual உலகத்தையும் அதில் மனிதர்களை தனது power source க்காகவும் உருவாக்கும். முழுவதுமே மாயை என்று அறியாவண்ணம் அங்கு உள்ள மனிதர்கள் கணினியின் virtual simulation னால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள். அதில் வரும் neo என்ற கதாபாத்திரம் கணினியால் உருவாக்கப்பட்ட Virtual உலகத்தில் மனிதர்கள் உழல்கிறார்கள் என்று உண்மையை உணர்ந்து. அந்த Virtual Simulation கட்டுப்படுத்தும் மெஷினை அழித்து அங்கு உள்ள மனிதர்களை எப்படி நிஜ உலகத்திற்க்கு கொண்டு வருகிறார்கள் என்பதே matrix ன் கதை கருவாகும்.

சங்கரின் அத்வைதத்தின்படி முழுமுதன்மையான பிரம்மம் மட்டும் மெய் மற்றவை எல்லாம் மாயையை என்கிறது. நாம் காணும் பிரபஞ்சம் என்பது பிரமத்திலிருந்து உருவானவை அல்ல மாறாக நமது பிரபஞ்சமே பிரம்மம்தான். நமது புறஉலகம் என்பது உண்மையான ஒன்றுதான். ஆனால் அதன் குணங்கள், சாரங்கள், வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது. 

அத்வைதம் என்பதே இரண்டற்றா நிலையாகும்(Non Duality). அனைத்துமே ஒற்றை உண்மையான பிரம்மம் மட்டுமே. 

அதேபோல் ஜீவாத்மாவும் பிரம்மமே. ஜீவாத்மா தான் புறஉலகில் காணும் பிரபஞ்ச மாயைக்கு ஆட்பட்டு காமம், குரோதம் மற்றும் மோகம் போன்ற குணங்களால் சுயத்தை இழந்து மாயையில் உழல்கிறது. எப்போது ஜீவாத்மா இந்த மாயையில் இருந்து விடுபட்டு தன்னை தானே பிரம்மம் என்று உணர்கிறதோ. அதுவே மெய்யான பிரம்மத்தை அடைவதற்கான வழி என்கிறது.

படத்தில் வரும் Virtual Simulation program தான் matrix மற்றும் அதை அத்வைதத்துடன் ஒப்பிட்டால் அதுதான் பிரபஞ்ச மாயை(matrix = மாயை). எப்படி neo கதாபாத்திரம் உண்மையை உணர்ந்து Virtual Simulation உலகத்தில் உள்ள மனிதர்களை எவ்வாறு zion என்ற உண்மையான உலகத்துக்கு கொண்டுவருகிறதோ அதேபோல் அத்வைதமும் ஜீவாத்மா தானும் பிரம்மம் என்ற சுயத்தை உணர்ந்து பிரபஞ்ச மாயையிலிருந்து விடுபடச்சொல்கிறது.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்